அறுபத்து ஆறாவது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் மகிழ்வுடன் கொண்டாடப் பட்டது.
தலைநகர் தில்லியில் நடைபெற்ற கண்கவர் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
நமது நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வருடந்தோறும் நடைபெறும் இவ்விழாவில் -
இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
ஜனவரி/25 அன்று காலை 10 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சற்று நேர ஓய்வுக்குப் பின்னர்,
அண்ணல் காந்திஜியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
காந்தி அஞ்சலி |
தொடர்ந்து - ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் பணியை ( Guard of honour) ஏற்றவர் - இந்திய விமானப்படை விங் கமாண்டர் பூஜா தாகூர் .
அதன்படி - அணிவகுப்பு மரியாதையை விங் கமாண்டர் பூஜா தாகூர் வழி நடத்தினார்.
21 குண்டுகள் முழங்க - அமெரிக்க அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை செலுத்தும் பூஜா தாகூர் |
ஜனாதிபதி மாளிகையில் சிறப்பாக வழங்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ந்து -
''உங்களுடைய சிறப்பான வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி. இதை இந்தியா எனக்களித்த மாபெரும் கௌரவமாகவே கருதுகின்றேன்!..'' - என்று நெகிழ்ச்சியுடன் கூறி கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
குடியரசு விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொண்டதால் 80 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னமான அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, சிறப்பு விருந்தினர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி - ஆகியோர் விழா மேடையில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து - 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியகீதம் இசைக்கப்பட - அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.
ராஜபாதையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத சிறப்பு கண்ணாடி கூண்டில் சிறப்பு விருந்தினர்களுடன் - பிரணாப் முகர்ஜி, ஹமீது அன்சாரி, நரேந்திர மோடி ஆகியோர் அமர்ந்திருக்க அணிவகுப்பு தொடங்கியது.
முன்னதாக - பணியின் போது வீரமரணம் எய்திய -
மேஜர் முகுந்த் வரதராஜன், நாயக் நீரஜ் குமார் சிங்
ஆகிய இருவருக்கும் - நாட்டின் பாதுகாப்புத் துறையில் உயரியதான அசோக சக்ரா விருதுகளை வழங்கி - குடியரசுத் தலைவர் கௌரவித்தார்.
2014 ஏப்ரல் மாதம் ஜம்மு - காஷ்மீரில் ஒளிந்திருந்து தாக்கிய பயங்கரவாதிகள் மூவரை வீழ்த்தி - தன் இன்னுயிரைத் துறந்தவர் - மேஜர் முகுந்த் வரதராஜன்.
மேஜர் முகுந்த் வரதராஜன் கௌரவிக்கப்படுகின்றார். |
அவருக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மனைவி இந்து பெற்றுக் கொண்டார்.
2014 ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீரில் ஒளிந்திருந்து தாக்கிய பயங்கரவாதி ஒருவனை வீழ்த்தி - தன் இன்னுயிரைத் துறந்தவர் - நாயக் நீரஜ்குமார் சிங்.
நாயக் நீரஜ்குமார் சிங் கௌரவிக்கப்படுகின்றார். |
அவருக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மனைவி பரமேஸ்வரி தேவி பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் முதன்முறையாக முப்படைகளைச் சேர்ந்த பெண்கள் படைப் பிரிவுகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
விமானப்படையின் வீராங்கனைகள் |
வீரமங்கையரின் அணிவகுப்பு |
ராணுவ அணிவகுப்பு மற்றும் வீர, தீர சாகசங்களைக் கண்டு மகிழ்ந்த ஒபாமா - எல்லைப் பாதுகாப்பு படையின் டேர் டெவில்ஸ் வீரர்கள் ஓடும் மோட்டார் சைக்கிளில் கோபுரம் அமைத்து சாகசம் நிகழ்த்தியதை - கைதட்டி ரசித்தார்.
மேலும் நாட்டின் - பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளைப் பற்றி - அதிபர் ஒபாமாவிடம், பாரதப் பிரதமர் அவர்கள் அவ்வப்போது விளக்கம் அளித்தார்.
கடற்பகுதியைக் கண்காணிக்கும் பி-81 மற்றும் மிக்-29 ரக போர் விமானங்கள், ஏவுகணைகள் அணிவகுத்து வந்தன.
அதிநவீன ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் ஆயுதங்களைக் கண்டறியும் ராடார் ஆகியன பேரணியில் இடம்பெற்றன.
விமானப்படை, கடற்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பேரணியில் அணிவகுத்துச் சென்றன.
கடந்த ஆண்டில் வீரச்செயல் புரிந்த சிறார்களும் அலங்கார வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் - பாரம்பர்ய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு மாநில ஊர்திகளும் நாட்டு நலத்திட்டங்களை விளக்கும் வண்ணமயமான அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள் வீரநடையுடன் அணிவகுத்து வந்தனர்.
நீண்ட நெடிய கடற்பகுதியை கண்காணிப்பு மற்றும் நீர் மூழ்கியை எதிர்க்கும் பி-81 மற்றும் அதி நவீன மிக்-29 போர் விமானங்கள் - ராணுவ அணிவகுப்பில் - இடம் பெற்றதும் - இதுவே முதல் முறை.
அமெரிக்க அதிபர் ஒருவர் - குடியரசு தின விழாவில் பங்கு பெறுவது இதுவே முதல் முறை.
பிரத்யேக பாதுகாப்பு விதிமுறைகளின்படி எந்தவொரு அமெரிக்க அதிபரும் 40 நிமிடங்களுக்கு மேல் திறந்தவெளி நிகழ்ச்சியில் பங்கேற்றதில்லை.
அமெரிக்க அதிபர் அதை மீறி - இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக திறந்த வெளியில் இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுவும் இதுவே முதல் முறை!..
மேலும், குடியரசு தின நிகழ்ச்சிகள் முழுவதையும் இணையத்தின் வழியாக - நான் பார்த்து மகிழ்ந்ததும் - இதுவே முதல் முறை!..
நாளிதழ்களின் செய்திகளைக் கொண்டு - அமெரிக்க அதிபரின் வருகை, குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் - என இயன்றவரை பதிவிட்டுள்ளேன்.
இவற்றையெல்லாம் அனைவரும் நேற்றே - கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்..
இருந்தாலும் நிகழ்வுகளை தளத்தில் வெளியிடுவதில் - எனக்கொரு மகிழ்ச்சி..
அழகிய நேர்த்தியான படங்கள் நமது அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
Thanks To
MINISTRY OF
INFORMATION AND BROADCASTING
GOVERNMENT OF INDIA
ஜய்ஹிந்த்!..
* * *
பிரமாதமான விழா போல பிரமாதமான பதிவு நண்பரே....
பதிலளிநீக்குநண்பரே ஒபாமா இந்தியா வருவது இது இரண்டாவது முறை முன்பு 2010தில் வந்தார்.
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்
அன்பின் ஜி..
நீக்குஇனிய வருகையும் கனிவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! 25ந்தேதியே ஒரு திருமணத்திற்காக மதுரை சென்று விட்டதால் நேற்று முழுவதும் தொலைக்காட்சியைப் பார்க்க இயலாதிருந்தது. தங்களின் பதிவு அந்தக் குறையைப்போக்கி விட்டது. நேரடியான வர்ணனையைப் பார்ப்பது போலிருந்தது!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகை எனக்குப் பெருமகிழ்ச்சி..
தெரிந்த அளவு செய்திருக்கின்றேன்.
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி..
அருமை. பயணத்தில் இருந்ததால் நிகழ்வுகளை பார்க்க வில்லை. இங்கே படங்களாக பார்த்து விட்டேன்....
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
சிறப்பான நிகழ்வுகள்... நாங்களும் கண்டுகளித்தோம்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதாங்களும் கண்டு களித்தமைக்கு மகிழ்ச்சி..
மிக அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள், புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..