அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..
இன்று மங்கலங்கள் நிறைந்த - தை மாதத்தின் முதல் நாள்.
நன்றியறிதலை முதற்கண்ணாகக் கொண்டு இயற்கையைப் போற்றி வணங்கி - தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் இன்று.
தேவர்களுக்கு பகல் பொழுதாகிய உத்ராயண புண்ய காலத்தின் முதல் நாள்.
சூரியன் - தை முதல் நாளில் மகர ராசிக்குள் பிரவேசிக்கின்றான்.
காலகதியில் பத்தாவது மாதம் - தை மாதம்.
அதனால் தான் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள்.
தை முதல் நாளிலிருந்து ஆனி மாதம் முடிய உள்ள ஆறு மாதங்களும் சுப காரியங்களுக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன.
தை மாதத்தில் - இல்லங்கள் தோறும் மங்கல நிகழ்வுகளும் ஊர்கள் தோறும் திருவிழா வைபவங்களும் பொலிந்து விளங்குகின்றன.
தமிழர்கள் - உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கெல்லாம் மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் பெருமைக்கு உரியது - பொங்கல் திருநாள்.
மார்கழியின் கடைசி நாளை - போகி என அனுசரித்து பழையனவற்றை விலக்கி - பயன்படும் பொருள்களை புதிதெனத் துலக்கி,
உள்ளமும் இல்லமும் தூய்மை கொண்டு விளங்க - பொங்கல் திருநாளின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.
தை முதல் நாளில் குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் - அவரவர் குடும்ப மரபுப்படி புது அரிசி கொண்டு - புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிடுவர்.
புத்தரிசி பொங்கியதும் பொங்கல் பானைக்கு திருநீறு சந்தனம் குங்குமம் இட்டு இஞ்சி மஞ்சள் கொத்துகளைக் கட்டி பல வகையான கனிகளுடன் கரும்பு என - சூரியனுக்கு சமர்ப்பித்து வணங்குவர்.
தவிரவும் கடும் உழைப்பைக் கண்டு நிலமகள் உவந்தளித்த விளைபொருட்கள் அனைத்தையும் சூரியனுக்கு நிவேதனம் செய்வர்.
புத்தரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி இவற்றோடு சர்க்கரைவல்லி, சேனை, மற்றும் கருணைக் கிழங்கு ஆகியவைகளும் அவரை, பீர்க்கு, பறங்கி, பூசனி என தோட்டப் பயிர்களும் கடவுளுக்குக் காணிக்கையாகின்றன.
நல்ல மழை பொழிந்ததற்கும் நாடு செழித்ததற்கும் நன்றி கூறும் திருநாளே - பொங்கல் திருநாள்.
தங்கள் உயிரோடும் உணர்வோடும் ஓட்டி உறவாடும் உறவு முறைகள், தோள் கொடுத்து நின்ற தோழமைகள், இன்முகம் காட்டி உடன் வந்த நன்முகங்கள் என அனைவருடனும் கலந்து மகிழும் திருநாள் - பொங்கல் திருநாள்.
தொன்று தொட்டு வரும் பாரம்பர்ய பண்பாட்டிற்கு - மேல் விளக்கங்கள் கற்பித்து எத்தனை எத்தனையோ புதிய தகவல்கள் - காணக் கிடைக்கின்றன.
பொங்கலிடும் போது -
இந்த மந்திரத்தைச் சொல்லவேண்டும். அந்த ஸ்லோகத்தைக் கூற வேண்டும் - என்றெல்லாம் புதியனவற்றைக் கற்பிக்கின்றன - இன்றைய ஆன்மீக ஏடுகள்...
அவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
முற்றத்தில் விறகு அடுப்பில் மூண்டெழுந்த அக்னி
சமையல் மேடை எரிவாயு அடுப்பில் தழைக்கட்டும்!..
மண்பானையில் மகிழ்ந்து பொங்கிய பொங்கல் -
கூச் எனக் குதிக்கும் குக்கரில் கொதித்துக் குழையட்டும்!..
மனிதநேயம் எனும் பொற்பானையில் அன்பையும் பண்பையும் நிறைத்து ஆனந்தப் பொங்கல் வைத்து சுற்றம் சூழ - கூடிக் குளிர்ந்திருந்து,
பொங்கலோ பொங்கல்!..
பொங்கலோ பொங்கல்!..
பொங்கலோ பொங்கல்!..
- எனக் கூவிக் குதுகலித்து - கோடி நலன் பெற்று மகிழ்ந்திருப்போமாக!..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர். (1033)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும்
நன்னாளாகிய தைப்பொங்கல் நாளில்
நீர்வளமும் நிலவளமும் நிறைய வேண்டும்.
நமது வாழ்வும் வளமும் தழைக்க வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்!..
அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
* * *
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
பதிலளிநீக்குகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
அன்புடையீர்..
நீக்குதங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பகிர்வு....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தை பிறந்தாச்சு
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
அன்புடையீர்..
நீக்குஇனிய கவிதையுடன் வாழ்த்துரை..
தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே எங்குதான் கிடைக்கிறதோ தங்களுக்கு படங்கள் கொள்ளை அழகு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் அன்புக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
அழகான படங்கள், இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் இனிய வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி..
தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
வாழ்க நலம்.. நன்றி..
தங்கள் பொங்கல் பதிவினை நான் பார்க்கவில்லை. வருந்துகிறேன். அழகான வடங்கள் அதைவிட அழகான வரிகள் அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் பாலமகி..
நீக்குதங்களின் தேடுதல் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் வருகைக்கு மிக்க நன்றி..