நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 20, 2013

மார்கழிப் பனியில் - 05

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 05 


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 

ஆலய தரிசனம்

சமயபுரம்

கோயில் என்றால் சிதம்பரம். 
கோயில் என்றால் திருஅரங்கம்
அப்படியே கோயில் என்றால் சமயபுரம்.


ஆயி மகமாயி ஆயிரங் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்

கண்ணனூர் மாரியம்மா காப்பாத்த வாருமம்மா
சமயபுரம் மாரியம்மா சடுதியிலே வாருமம்மா

சந்நிதியில் வந்து நின்னா சாம்பிராணி வாசமடி
சத்தியமா வந்து நின்னா சவ்வாது வாசமடி

பெத்தவளும் நீயிருக்க பேரு வச்சி பாத்திருக்க
மத்த குறை ஏதுமில்லே ஈஸ்வரியே மகமாயி


வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாடி வாருமம்மா
தங்கப் பிரம்பெடுத்து சதிராடி வாடியம்மா

வேப்பிலையும் மாலையடி வித்தகியே மாரியம்மா
கொப்புடைய நாயகியே கோலவிழி மாரியம்மா

மல்லிகைப்பூ வாசத்திலே மாதரசி வாருமம்மா
பிச்சிப்பூ வாசத்திலே பேரரசி வாருமம்மா

மஞ்சளிலே நீராட்டி மாவிளக்கு ஏத்தி வச்சோம்
குங்குமம் தாருமம்மா குலங்காக்கும் மாரியம்மா

ஓம் சக்தி ஓம் 

16 கருத்துகள்:

  1. பாடலை வாசிக்கும் போதே சிலிர்க்கிறது ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மார்கழிப் பகிர்வுகள்.. அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மாயனே மன்னு...... ஆண்டாளின் பாசுரமும், ஆயிரம் கண்ணுடையாளான எங்கள் சமயபுரம் மஹமாயீ அம்மனின் தரிஸமும் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருப்பாவையோடு தந்த திவ்வியப் பாமாலை மிக அருமை ஐயா!

    நீங்களுக்கும் உங்கள் குடும்பத்தவரும்
    நல்லருள் நிறைந்து நலமோடு வாழ
    மனதார வேண்டி வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மாயன் புகழும் , மகமாயி மகிமையும் கலந்த பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மாரியம்மா புகழ் பாடும் கவிதை.

    மார்கழியில் உங்கள் பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பார்த்ததும் என் உள்ளம் படும் பாடு
    சொன்னாலும் புரியாது

    மாரி அம்மன் புகழ் கேட்டு
    மயங்குதம்மா என் மனசு
    மாயவனின் துதி கேட்டு
    கசிந்தது கண்ணிரண்டும்

    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      இனிய கவிதை.. அழகிய கருத்துரை..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வருடா வருடம் திருப்பாவை, திருவெம்பாவை படிக்கின்றோம். அதில் சலிப்புறா வண்ணம், ஒவ்வொருநாளும் திருப்பாவை பாடலோடு ஒரு கோயிலையும் இணைத்து பதிவாக்கியது நல்ல யுக்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..