நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆநிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆநிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 31, 2017

வாழ்வும் வளமும்



பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா..


வா.. வா.. ஒத்தைக்கு ஒத்தை.. வாடா.. வா!.


வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுது வரும் மாடு..
அண்டிப் பிழைக்கும் அந்த ஆடு - இதை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!..






பால் குடிக்கிற நேரத்தில பாட்டு வேறயா!..
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை 
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி..




பாரம்பர்ய ஓங்கோல் பசு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு..
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துனைக் காப்பதென் பாடு!..


சொக்கருக்கு அங்கயற்கண்ணி
தோள்கொடுத்து மாலையணிந்து
மதுரையிலே ஊர்வலம் போக
வாங்கி வந்த காளையடா!..






வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
அன்பினில் உற்றது..
அனைத்தும் நிறையப் பெற்றது!..
உயிருள் உணரத் தக்கது..
உய்யும்வழி அருளத் தக்கது!..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!.. 
***