நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
இரண்டாம் வெள்ளி
இன்று
திருஞானசம்பந்தர்
அருளிச்செய்த திருக்கடைக்காப்பு
தலம்
திருக்கோலக்கா
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ.. 1/23/1
மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாய்வதும்
பெண்கள் தம் கரங்களால் குடைந்து நீராடுவதும் ஆன பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் -
சடைமுடியும், பிறையும், திருமேனி முழுதும் திருநீறும் இடையில் கீள் எனப்படும் உடையும் கொண்டு விளங்கும் இறைவனின் திருக்கோலம் தான் என்னவோ?..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

இறைவனின் திருக்கோலத்தை மனக் கண்களால் பருகி அவன் தாள் பணிவோம்.
பதிலளிநீக்குஓம் நமச்சிவாய..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்