நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி சுவாதி
ஸ்ரீ சுந்தரர் குருபூஜை
சுந்தரர் அயிராவணம் எனும் யானையின் மீது ஆரோகணித்து
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலை சென்றடைந்த நாள்
திரு ஆரூரில் பரவை நாச்சியாரும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரும்
சிவகதி எய்தினர்..
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1
சுந்தரர் திருவடிகள் போற்றி
பரவையார் திருவடிகள் போற்றி
சங்கிலியார் திருவடிகள் போற்றி
சேரமான் திருவடிகள் போற்றி
சிவாய நம ஓம்
***


வாழ்ந்து நமக்கு வழிகாட்டிய அத்தனை பெரியோர்கள் தாளும் வணங்கிப் போற்றுவோம்.
பதிலளிநீக்குதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,.
வணங்கிப் போற்றுவோம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்