நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
செவ்வாய்க்கிழமை
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
***

எமக்கு எல்லாம் நீயே என்று ஒரு வார்த்தையில் சொல்லாமல் அழகாய் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறார்!
பதிலளிநீக்குஓம் நமச் சிவாய.
மிக அழகான
நீக்குதேவார திருப்பாடல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வாண்ணா
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..
நீக்குமகிழ்ச்சி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எபியில் அறிந்து கொண்டேன். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களுக்கு இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்
திருநாவுகரசரின் தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன். இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுவதென்பது இதுதான். பாடல் வரிகளை பாடும் போது இறைவனை நினைத்து கண்ணீர் மல்குகிறது.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் வாழ்த்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..