நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 14, 2026

அப்பன் நீ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 செவ்வாய்க்கிழமை


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
    ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
    துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
    இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. எமக்கு எல்லாம் நீயே என்று ஒரு வார்த்தையில் சொல்லாமல் அழகாய் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறார்!

    ஓம் நமச் சிவாய.

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வாண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

      மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எபியில் அறிந்து கொண்டேன். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களுக்கு இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    திருநாவுகரசரின் தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன். இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுவதென்பது இதுதான். பாடல் வரிகளை பாடும் போது இறைவனை நினைத்து கண்ணீர் மல்குகிறது.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..