நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
செவ்வாய்க்கிழமை
மனித உடலில்
குருதிக்கு அதிபதி செவ்வாய்..
செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீமுருகப்பெருமான்
வயதானோர் தம் பிரச்னைகளுள் ஒன்று இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவது...
சரி... இதனை எப்படி எதிர் கொள்வது?!..
முருகா காப்பாற்று!... - என்று செவ்வேள் குமரனைச் சரணடைந்து செவ்வாய்க்கிழமை களில் விரதம் இருப்பது...
வாரத்தில் இரண்டு நாட்கள் உணவுடன்
முருங்கைக் கீரை ரசம் அருந்துவது..
அத்திப் பழம் சாப்பிடுவது..
இதனுடன்
சுட வைத்த பால்
பனங்கற்கண்டு அவரவர் விருப்பம்..
சமையலில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது..
அவ்வப்பொழுது
பேரீச்சம் பழங்கள் தின்பது..
வாரத்தில் இரண்டு நாட்கள்
பீட்ரூட் சாறு அருந்துவது..
வாரத்தில் மூன்று நாட்கள்
முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்வது.
மாதுளம் பழம் கருப்பு திராட்சை இவற்றை அவ்வப்பொழுது சாப்பிடுவது...
இவற்றால்
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகி பிரச்னை தீர்கின்றது என்பது வைத்தியக் குறிப்புகள்...
தக்க மருத்துவரது ஆலோசனையும் மேற்பார்வையும் அவசியம் தேவை...
(இயற்கை வழி குறிப்புகளில் இருந்து)
வாழ்க நலம்
***



நல்ல ஆலோசனைகள். நல்ல குறிப்புகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
இயற்கையான உணவு காய், கீரை சாப்பிட மருத்துவர் ஆலோசனை எதற்கு?
பதிலளிநீக்குநியாயமான கேள்வி தான்!...
நீக்குமுருகன் இல்லாவிட்டால் முவ்வுலகமே ஏதப்பா... முருகன் திருவடிதான் முன் நின்று காக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகன் திருவடி முன் நின்று காக்கட்டும்.
நீக்கு