நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 29
செவ்வாய்க்கிழமை
தஞ்சை மாநகரில் இப்போது விளங்குகின்ற அரண்மனை நாயக்க மன்னர்களால்
பதினேழாம் நூற்றாண்டில்
கட்டப்பட்டது..
பற்பல தாக்குதல்கள் இங்கே இந்த அரண்மனையில் நடந்திருக்கின்றன..
இந்நாட்டிற்குள் வந்து நுழைந்த அயல் தேச கொள்ளையர்களுக்கு அஞ்சிய மக்கள் பலவகையிலும் பழங்கால சிற்பங்களைக் காப்பாற்றி ஒளித்து வைத்தனர்..
அப்படியான கலைச் செல்வங்கள் -
அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டிருந்தன..
அப்படிக் கிடைத்தவை -
1951 ல், தஞ்சை அரண்மனையில்
பொதுமக்கள் பார்வைக்காக - என
ஒருங்கிணைக்கப்பட்டது ...
இக் கலைக்கூடம் அமைக்கப்பட்ட நாள் 09.12.1951..
ஏழு கிமீ தொலைவில் உள்ள புன்னை நல்லூரில் இருந்து இதனைப் பார்க்க முடியும்..
இத்தகைய சிறப்புடைய தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திற்குள் சிறியதாக சுற்றுலா..
வாருங்கள்..
மேலுள்ள சிற்பங்களின் விளக்கம் |
கலைக் கூடத்திலேயே
இரண்டு மணி நேரம் ஆகி விட்டது..
அரண்மனை வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கு
வேறொரு சமயம்..
மேலும் சில காட்சிகளை
நாளைய பதிவில்
காணலாம்..
வாழ்க கலை
வாழ்க தஞ்சை
***
நன்று. அவ்வளவு வருடங்கள் தஞ்சையில் இருந்தும் நான் பார்க்காத இடம்!
பதிலளிநீக்குஅதெல்லாம் இருக்கட்டும். சென்னையில் விஜிபி கடற்கரை, சென்னை மியூசியம், கிண்டி பாம்புப் பண்ணை, சிறிது தூரத்தில் ராஜஸ்தானி வில்லேஜ் உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் கிராம்ம்லாம் பார்த்தாச்சா?
நீக்குஹிஹிஹி.... கரெக்ட்டா கேக்கறீங்களே நெல்லை... இல்லை, இன்னும் இல்லை! வி ஜி பி கடற்கரை மட்டும் பார்த்திருக்கிறேன், சென்று போட்டோஸ் எல்லாம் எடுத்திருக்கிறேன்!
நீக்குஇந்த இடங்களுக்குச் சென்று படங்கள் பல எடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉலோகச் சிலைக் கூடத்தில் சிற்பங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என ஒருவர் விளக்கினார்.
சிறப்பான தகவல்கள். இப்படியான கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் அவசியமான ஒன்று. பலருக்கும் நமது பழமை மீதான ஆர்வமோ அக்கறையோ இருப்பதில்லை என்பது வேதனையான உண்மை.
பதிலளிநீக்குபடங்களும் விவரங்களும் அழகு, துரை அண்ணா. தஞ்சை அரண்மனையும் கலைக்கூடமும் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. லேசாகவே நினைவில் உள்ளது.
பதிலளிநீக்குகீதா
ஈரோடிலும் கலைக்கூடம் இருக்கிறது. பேருந்து நிலையம் அருகிலேயே பூங்கா கோயில் என்று பெரிய வளாகத்துள் சிறிய கலைக்கூடமும், சிறிய அருங்காட்சியகமும்.
பதிலளிநீக்குஇப்படி அருகில் கிடைத்த சிலைகளை கிடைத்த இடம் வருடம் எல்லாம் குறிப்பிட்டு வைத்திருந்தார்கள். படங்கள் இருக்கு இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை. பதிவு எழுதும் ஆர்வமும் இல்லாமல் போனதால் எதுவுமே செய்யாமல் போகிறது.
கீதா
நான் இதுவரை தஞ்சாவூர் வந்ததில்லை (ரயில்வே ஸ்டேஷன் வந்து கடந்து இருக்கிறேன்) இப்படங்கள் காண்பதில் வழியாக மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள். படங்கள் எல்லாம் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். மனதில் நிற்கும் புகைப்படங்கள் சிற்பங்கள் உட்பட. உள் கோபுரம் மிக அழகாக இருக்கிறது நீங்கள் எடுத்த விதமும் நன்றாக இருக்கிறது. நான்முகனும் அந்த சிலையும் மிக அழகாக இருக்கின்றன,
பதிலளிநீக்குமிக்க நன்றி பகிர்விற்கு.
துளசிதரன்
துரை அண்ணா அந்தக் கோபுரம் படம் நல்ல க்ளிக். இதைக்காலையில் சொல்ல விட்டுப் போச்சு. இப்ப துளசியின் கருத்தை இங்கு போட வந்த போது அவர் குறிப்பிருப்பதைப் பார்த்தப்பதான் எனக்கு டக்குனு தோன்றியது ஆ காலையில் போட நினைத்துப் போட்டேனா என்று...அதான் ....காலையில் போட்ட கருத்தும் இங்கு காணலை இன்னும் நீங்க வெளியிடவில்லை என்றுநினைக்கிறேன். அதான் சரி இப்ப போட்டிடுவோம்னு
பதிலளிநீக்குகீதா
கலைக்கூடம் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குசெய்திகள் அருமை.
தஞ்சை அரண்மனை, கலைக்கூடம் எல்லாம் நிறைய தடவை பார்த்து இருக்கிறோம். அரண்மனையில் ராஜாவை பார்த்து பேசி இருக்கிறோம். சாரின் அண்ணன் குடும்பத்தினரும், நாங்களும் ராஜாவுடன் தேநீர் அருந்தி இருக்கிறோம்.
அப்போது எல்லாம் காமிரா, அலைபேசி இல்லை.
பிலிம் போட்டு எடுக்கும் காமிராவில் படம் எடுத்தது சிவகங்கை பூங்காவை. அரண்மனை , சரஸ்வதி மஹால் எல்லாம் எடுத்து இருக்கிறோம்.
தஞ்சை கலைக் கூடம் படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதஞ்சை அரண்மனை ,கலைக் கூடம் பார்த்திருக்கிறேன். படங்கள் கண்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.