நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 25
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
-: குன்றக்குடி :-
தனன தனன தனத்தந் ... தனதான
தவள மதிய மெறிக்குந் ... தணலாலே
சரச மதனன் விடுக்குங் ... கணையாலே
கவன மிகவு முரைக்குங் ... குயிலாலே
கருதி மிகவு மயக்கம் ... படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங் ... குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் ... தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந் ... திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
வெண்ணிற சந்திரனின்
ஒளியெனும் நெருப்பினாலும்
மன்மதன் விடுக்கின்ற
பூங்கணையினாலும்
சோகத்தில் கூவுகின்ற
குயிலின் குரலாலும்,
நான் என் மனதில் மயக்கத்தை
அடையலாமோ?..
பவள நிற இதழ் கொண்ட
பசுங் குறத்தி வள்ளி நாயகியின்
திருத்தன பாரங்களில்
திகழ்கின்ற
மணி மாலைகளில்
பொருந்துகின்ற திருமார்பனே
மயூரகிரி எனும் குன்றக்குடியில்
வீற்றிருக்கும் பெருமாளே...
**
முருகா முருகா..
முருகா முருகா..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. நாமும் முருகா சரணமென அவன் பாதங்களை போற்றுவோம். அவன் நம் நல்வினைகளுக்கேற்ப நமக்கு நல்லதையே நடத்தித் தர பிரார்த்தனைகள் செய்வோம். அனைத்தையும் நல்லபடியாக அவன் நடத்தித் தருவான் . 🙏. முருகா., முருகா.
தங்களின் விட்டுப் போன சில பதிவுகளுக்கும் பிறகு நிதானமாக வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருப்புகழைப் பாடி துதித்து முருகனின் திருவருளை பெறுவோம்.
பதிலளிநீக்குகுன்றகுடி முருகன் திருப்புகழை பாடி வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குபடம் நன்றாக இருக்கிறது.
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
குன்றக்குடி வாழும் பெருமானை வெள்ளி நாளில் தரிசித்தோம்.
பதிலளிநீக்குஓம் முருகா சரணம்.