நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 21, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 7   
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: குன்றக்குடி :-

தானான தனதான தானான தனதான
தானான தனதான ... தனதான


நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும் ... வெயிலாலும்

நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக ... வலையூடே

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர் ... துயரூடே

ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ ... அருள்தாராய்..

தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு ... மொருபோதில்

தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி ... மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு ... புயவீரா

வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
மாயூர கிரிமேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கூவுகின்ற குயிலாலும்,  மன்மதனுடைய  பூங்கணைகளாலும்,

நாள் தோறும் வெயில் போலக் காய்கின்ற நிலவொளியாலும்,

மாதர்களின் வசை மொழியாலும் வேய்ங் குழலின் இசையாலும்,

விரும்புகின்ற ஆசையால் விளைகின்ற மோகம் எனும் வலைக்குள் விழுந்து

ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும்  வீணாகின்ற

நீள்விழிப் பெண்களால் ஏற்படும் துயரத்திற்குள் வீழாமல்,

அழிவில்லாத மேலான நிலையை அடைந்து  உன்னுடன் சேர்ந்து நான் இருப்பதற்கு அருள் புரிவாயாக..

கறந்து வைத்த பாலை ஆசையுடன் தேடி உரலுடன் ஏறி உண்டு விளையாடுகின்ற  பொழுதில்

தாய் யசோதை காணாதவாறு  வெண்ணெயையும் களவு செய்த தாமோதரனாகிய திருமாலின் மருகனே

திருமகள் போல
அழகுடையவளும்  மேகங்கள் தவழ்கின்ற  மலைக் காட்டில் வளர்கின்றவளுமாகிய  வள்ளி நாயகியின்

அழகில் மனம் கொண்டு விளையாடுகின்ற
புயங்களை உடைய வீரனே,

விண்ணோர்கள் புகழ்கின்ற நாட்டில் தேனாறு  சூழ்ந்து வருகின்ற

மயூரகிரி எனப்படும் குன்றக்
குடியில் வீற்றிருக்கும் பெருமாளே..
*

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குன்றக்குடி திருப்புகழ், பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. பாடலைப் பாடி முருகனை தொழுது மகிழ்ந்தேன். குன்றக்குடி பெருமான் அனைவரையும் காத்து ரட்சிக்க வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. முருகா.. முருகா... முருகா...
    முருகா.. முருகா... முருகா...
    முருகா.. முருகா... முருகா...
    முருகா.. முருகா... முருகா...
    முருகா.. முருகா... முருகா...
    முருகா.. முருகா... முருகா...

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம். முருகப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. வெள்ளி நாளில் மயூரகிரி பெருமான் அருள் வேண்டி அவன் பாதம் வணங்கி நிற்போம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  6. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..