நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 19
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தானன தனன தானன தனன
தானன தனன ... தனதான


தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர ... முதிராத

தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ ... மதகோப

வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய ... அரசாகி

வாழினும் வறுமை கூறினு நினது
வார்கழ லொழிய ... மொழியேனே

பூரண புவன காரண சவரி
பூதர புளக ... தனபார

பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி ... குடியேற

ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ ... மயிலேறும்

ஆரிய பரம ஞானமு மழகு
மாண்மையு முடைய ... பெருமாளே..


தோரணங்கள் ஆடுகின்ற  
அரண்மனையின்  அழகிய வாசலில் 
முழவு, முரசு முதலிய வாத்தியங்கள் ஒலிக்கவும்

இளம் பெண்கள் சாமரம் வீசவும்
புலவர்கள் எனது
வீரத்தைப் புகழவும்

மதமும் கோபமும் கொண்ட யானைகள், 
தேர்கள், காலாட் படைகள், குதிரைகள்,  - என 
திசை நிரம்பி விளங்கவும்

நான் ஒரு அரசனாகி வாழ்ந்தாலும் 
வறுமை நிலை மிகுந்து வீழ்ந்தாலும் 

உனது திருவடித் தாமரைகளைத் தவிர 
வேறு எதையும் வேறு யாரையும் 
புகழ மாட்டேன்..

பூரணனே புவனத்திற்குக்  காரணனே 
குற வள்ளியின் திருத்தன 
பாரங்களில் அணைவோனே..

அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே
தேவர்களின் தலைவன்
அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படிச் 
செய்தவனே

வேதம் ஓதியபடி தாமரையில் அமர்ந்திருக்கும் 
நான்முக  பிரம்மன் அச்சம் கொள்ளும்படி
மயிலேறி வருகின்ற பெரியவனே..

பரம ஞானத்தையும் அழகையும் 
பராக்ரமத்தையும் உடைய பெருமாளே..

முருகா முருகா
முருகா முருகா
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. திருமுருகனை தரிசித்து வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தை வெள்ளியன்று முருகன் தரிசனம் சிறப்பாக கிடைத்தது. இன்றைய திருப்புகழும், அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. திருப்புகழ் பாடல் பாடி அதன் விளக்கமுணர்ந்து முருகனை வணங்கி, அனைவரையும் நலமாக காத்தருள வேண்டுமாய் முருகப்பெருமானை பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. முருகனின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. முருகப்பெருமான் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..