நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும்
தொலைந்திட வேண்டும்..
நாளைய தினம்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி
அனைவருக்கும்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
என்றென்றும்
நலம் பல நல்கி
தீராப் பிணியையும்
திருந்தாப் பகையையும்
தீர்த்தருளி
பாரதத் திருநாட்டின் துயர்
தீர்க்க வேண்டி நிற்போம்..
கல்வியைச் செல்வம்
என்றுரைப்பார் வள்ளுவப் பெருமான்..
கல்வியாகிய
செல்வத்திலிருந்து விளைவது
ஞானம் எனும்
பெருஞ்செல்வம்..
ஞானம் எப்படி
விளைகின்றது?..
கலையாத கல்வியினால்!..
எனவே தான்
கலையாத கல்வி வேண்டும் என, வேண்டிக் கொண்டார்
அபிராமி பட்டர்..
கற்ற கல்வியானது கலையாது இருக்க வேண்டும்...
காற்றில் ஓடும் மேகம் போல கல்வி கலைந்து போனால் அதனால் விளைவது ஒன்றும் இல்லை..
கற்ற கல்வி கலையாதிருக்க அருள்பவர் கணபதி..
நாம் கற்ற கல்வியினை
நமது
கருத்தினுள் ஒருமைப்
படுத்தும் வல்லமையைத் தந்தருள்பவர்
வல்லப கணபதி..
இப்படி ஒருமைப்பட்ட
புத்திக்குக் கிடைப்பது
எந்நாளும் வெற்றியே..
இந்நிலைக்கு ஏற்றி வைப்பவர் விநாயகர்..
அதனால் தான்
சித்தி விநாயகர்..
* சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி .. "
- என்று ஔவையார்
சொல்லும் நுட்பம் இதுவே!..
ஸ்ரீ விநாயகப் பெருமானைக்
கொண்டாடுவோம்..
ஸ்ரீ கணபதியைக்
கை தொழுவோம்..
பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனும் உக்ரதுர கமுநீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே..
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப் பருப்புடனெய்
எட்பொரி அவற்றுவரை இளநீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமிடிப் பல்வகை தனி மூலம்
மிக்க அடிசிற்கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!..
-: அருணகிரி நாதர் :-
ஓம்
கம் கணபதயே நம:
***
வினையெல்லாம் தீர விக்ன விநாயகனை வேண்டுவோம்.
பதிலளிநீக்குஎல்லா தீவினைகளும் நம்மை விட்டு விலக விநாயகப்பெருமான் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குவிநயாகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
பாடல் பிடித்த பாடல்.
விநாயகர் உலகை காக்கட்டும் வாழ்க வையகம்.
பதிலளிநீக்குதுரை அண்ணா வணக்கம். நலம்தானே!
பதிலளிநீக்குஉங்கள் கதைகள் எல்லாம் வாசித்தேன்! சிறப்பான கதைகள் இச்செவ்வாய்க் கதை உட்பட. நல்ல மருமகள்!
கலையாத கல்வியும்// அபிராமி அந்தாதி பாடல்!
நல்ல கருத்து. செல்வம் என்பது ஞானம்! ஆனால் இப்போதெல்லாம் கல்வி என்பதே பணம் பெருக்க என்று வியாபாரமாகிவிட்டதே!
எல்லாத் தடைகளையும் நீக்க நம்ம தோஸ்து விநாயகர் வழிகாட்டுவார் நம்புவோம். வேண்டுவோம்.
வாழ்த்துகள் துரை அண்ணா.
கீதா
விக்னங்களைக் களையும் விநாயகன் அனைவரின் துன்பங்களையும் களைய வேண்டும். மனமார்ந்த விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு