நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 18, 2021

கோவிந்த தரிசனம் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி மாதத்தின்
முதல் சனிக்கிழமை..


ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதியின் திருப்பாசுரங்கள் சிலவற்றுடன் 

ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் திருவடித் தாமரைகளைச் சிந்திப்போம்...


வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன் மாலை இடராழி நீங்குகவே என்று.. (2082)

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம் தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு ஊணாக உண்டான் உருவொடு பேரல்லால் காணாகண் கேளா செவி.. (2092)


பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் அடலோத வண்ணர் அடி.. (2097)

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய் தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும் மருதிடைபோய் மண்ணளந்த மால்.. (2099)


மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று.. (2100)

பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.. (2101)


ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண் முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு.. (2155)

காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள் ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி.. (2156)

ம் ஹரி ஓம்

நமோ நாராயணாய

***

6 கருத்துகள்:

  1. கோவிந்தா! கோவிந்தா! அருமையான தரிசனமும். பாசுரங்கள் பகிர்வும். அவன் அருளால் அனைவரின் துன்பங்கள் நீங்கி மன அமைதி பிறக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. புரட்டாசி முதல் சனிக்கிழமை வாழ்த்துகள்.  பெருமாளைச் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    புரட்டாசி முதல் சனிக்கிழமைக்கு அருமையான ஸ்ரீமன் நாராயணன் தரிசனங்கள் தரிசித்து கொண்டேன். பாசுரங்கள் அருமை. அனைவரையும் பெருமாள் நலமுடன் இருக்க வைக்கட்டும். ஹரி ஓம் நமோ நாராயணா.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. புரட்டாசி மாதம் பெருமாள் தரிசனம் செய்தேன். பாசுரங்களை படித்து வணங்கி கொண்டேன்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..