நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மகாகவியின்
நினைவு நாள்..
மகாகவியின்
கண்ணன் பாடல்கள்
அனைத்தும் கனியமுதம்..
ஆயினும்
இந்தப் பாடல் எனக்கு
மிகவும் பிடித்தமானது...
ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் நம்மை ஆழ்த்துவது..
எட்டு கண்ணிகளை
உடைய இந்தப் பாடல்
இரண்டு கண்ணிகளுடன்
தெய்வத்தின் தெய்வம் எனும் திரைப் படத்தில்
இடம் பெற்றிருக்கின்றது..
அனைவரும் அறிந்த
அந்தப் பாடலுடன்
மேலும் ஒரு கண்ணியைச்
சேர்த்து இன்று
வழங்கியுள்ளேன்..
மகாகவியின்
திருவடிகளுக்கு
எளியேனின் வணக்கம்..
கண்ணன் மனநிலையை
தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி
தங்கமே தங்கம்..
எண்ணம் உரைத்துவிடில்
தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும்
செய்வோமடி தங்கமே தங்கம்..
கண்ணன் மனநிலையை
கண்டுவர வேணுமடி தங்கமே..
தோழமை இல்லையடி
தங்கமே தங்கம்..
என்ன பிழைகள் இங்கு கண்டிருக் கின்றான்?அவை
யாவுந் தெளிவு பெறக்
கேட்டு விடடீ..
ஆற்றங் கரையதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்திற்
பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவாயடி
தங்கமே தங்கம்..
நேர முழுதிலும் அப்பாவி
தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி
தங்கமே தங்கம்
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வம் இருக்குதடி
தங்கமே தங்கம்..
***
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்
ஃஃஃ
சிறப்பு. பாரதியார் பாடல்களில் எண்ணி எண்ணி மகிழ எத்தனை எத்தனை பாடல்கள்...
பதிலளிநீக்குஅருமையான பாடல் பகிர்வுக்கும் மஹாகவிக்குச் செய்த அஞ்சலிக்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குபாரதியார் நினைவு நாளுக்கு பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குபாரதிக்கு வணக்கம்.
சிறப்பான அஞ்சலி.
பதிலளிநீக்குபாரதிக்கு எனது வணக்கம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கவிஞன்.