நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 10, 2020

கண்ணனைக் காண்க..



நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி நான்காம்
சனிக்கிழமை..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***

செண்பகாரண்யம் என்று
புகழப்படும்
மன்னார்குடி
ஸ்ரீ ராஜ கோபால ஸ்வாமியின்
திவ்ய தரிசனம்..
***

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே..(677)

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே..(678)
-: குலசேகரஆழ்வார் :-
***

அம்புலாவு மீனமாகி ஆமையாகி ஆழியார்
தம்பிரானு மாகிமிக்கதன்பு மிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்குலாயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோ எம்மீசனே..(786)

ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை
ஐயபால் அமுதுசெய்து
ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ..(787)

வெஞ்சினத்த வேழவெண்மருப் பொசித்து உருத்தமா
கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்தபேய்ச்சியா விபாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே!..(794)
-: திருமழிசையாழ்வார் :-
***

கோபாலன் ராஜ கோபாலன்
குன்றா நலங்குவிக்கும் பூபாலன்!..

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. மன்னார்குடிக்காரன் அழகோ அழகு! ஈடு இணை இல்லை. இவனோடு சேர்ந்த மற்ற இருவர் ஒருவர் வடுவூரில் இருக்கார். ஆனால் ராமர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவரின் செல்வாக்குக் கொஞ்சம் குறைவு தான். இன்னொருவர் வளநகர் எனப்படும் ஆறுபாதியில் இருக்கார். இவரைப் பார்த்தது குறித்து உ.வே.சா. எழுதி இருப்பார். நாங்க ஆறுபாதி வழியாவே பலமுறை சென்றும் இன்னும் இந்தக் கோயிலுக்குப் போகலை. இத்தனைக்கும் உறவுகள், நட்புகள் அங்கே இருக்கின்றனர். எப்போ அழைப்பானோ! காலை வேளையில் இந்தக் கடைசி சனியன்று பகிர்ந்த திவ்ய தரிசனத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வடுவூரான் தனி அழகு.. ஆனாலும்
      நம்ம கோபாலு...கோபாலு தான்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  2. நம் இறைவன், இறைவி அழகுக்கு ஈடேது? இனிய காலைப்பொழுதில் நல்ல தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இனிய தரிசனம்.  புரட்டாசி நான்காம் சனிக்கிழமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இனிமையான தரிசனம்.

    மன்னை இன்னும் சென்றதில்லை. என்றைக்கு அழைப்பு வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      மன்னார்குடிக்குச் செல்லும் வழியில்
      வடுவூர் ஸ்ரீராமனையும் தரிசனம் செய்து விடுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அருமையான தரிசனம். மன்னார்குடிக்கு அடிக்கடி போய் இராஜகோபாலனை தரிசனம் செய்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

      வாழ்க வையகம்...

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான கண்ணன் தரிசனம். இந்த வருடம் புரட்டாசி சனிக்கிழமைதோறும் உங்கள் பதிவில் நாராயணனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அழகான மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி தரிசனம் கண்டு இன்று ஆனந்தமடைந்தேன். பகிர்வுக்குமிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இந்த வருடம் விரிவாகப் பதிவிட இயல வில்லை..

      இணையம் ஓரளவுக்கு ஒத்துழைத்ததே பெரிய விஷயம்...

      நடப்பதனைத்தும் நாரணன் செயல்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் ஹரி ஓம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..