நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின்
மூன்றாவது சனிக்கிழமை ஆகிய
இன்று
ஸ்ரீ ராம தரிசனம்
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை
பேர எறிந்த பெருமணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
என்னென்ற மால திடம்.. (2119)
-: பொய்கையாழ்வார் :-
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்விழச் சென்று
குறளுரவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.. (2333)
-: பொய்கையாழ்வார் :-
பண்ணுலாவு மென்மொழிப் படைத்தடங் கணாள் பொருட்டு
எண்ணிலாவ ரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணிலாலொர் கண்ணிலேன்க லந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை
என்னுள் நீக்க லென்றுமே.. (842)
-: திருமழிசையாழ்வார் :-
சரங்களைத்து ரந்துவில் வளைத்தி லங்கை மன்னவன்
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்
பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்
அரங்கமென்பர் நான்முகத் தயன்
பணிந்த கோயிலே.. (802)
-: திருமழிசையாழ்வார் :-
***
கோவிந்தோ கோவிந்த
கோவிந்தோ கோவிந்த!..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ
அருமையான ராம தரிசனம். அலுக்கவே அலுக்காத ஒன்று. அதிலும் கடைசிப் படம் வடுவூர் ராமன், அழகோ அழகு! அவன் கிடைத்தவிதம் அதைவிட ஆச்சரியமான ஒன்று. பகிர்வுக்கு நன்றி,
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குவடுவூர் ஸ்ரீராமன் வரலாறு பற்றியும் தரிசித்தது பற்றியும் சில ஆண்டுகளுக்கு முன் பதிவுகள் எழுதியிருக்கிறேன்...
தங்கள் கருத்துரைக்கு நன்றியக்கா..
ராம் ஸ்ரீராம ராமஜெயம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
கீதா அக்கா படம் பார்த்தே வடுவூர் ராமன் என்று சொல்வது ஒரு ஆச்சர்யம். நானொரு கிணற்றுத்தவளை!
பதிலளிநீக்குஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :) வடுவூர் ராமு, மன்னார்குடி ராஜூ, ஸ்ரீரங்கம் ரங்கு, பண்டரிபுரம் விட்டலன் ஆகியோரை எளிதில் கண்டுபிடிக்கலாம். எப்போவும் கண்களிலும் மனதிலும் இருப்பவர்கள். அதே போல் நம்ம மதுரை நேரு பிள்ளையாரும், வடக்குக் கிருஷ்ணன் கோயில் கிருஷ்ணனும்! நம்ம மீனாளும் தான்!
நீக்குஎல்லாம் சரிதான்...
நீக்குகாஞ்சி வரதனையும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும் அழகர்மலைக் கள்வனையும் கண்ட மாத்திரத்தில் சொல்லி விடலாம்...
அட! ஆமால்ல! இவங்களை விட்டுட்டேனே!
நீக்குஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்று ராம நாமத்தைச் சொல்லி தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்கு"கோவிந்த நாம சங்கீர்த்தனம்" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் காதில் ஒலிக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குவாழ்க வையகம்...
ஓம் நமோ நாராயணா...
பதிலளிநீக்குஹரி ஓம் நமோ நாராயணாய..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபுரட்டாசி சனிக்கிழமையன்று திவ்யமாக ஸ்ரீ ராம பெருமான் தரிசனம் பெற்று ஆனந்தமடைந்தேன். படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகு. ராம நாமம் சொல்ல சொல்ல அனைத்து செல்வங்களும் தானாகவே சேர்த்து விடும். ஸ்ரீராம் ஜெயராம் ராம் ராம் ராம்... பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஸ்ரீராம் ஜெய்ராம்..
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஸ்ரீராம் ஜெயராம் ஜெய ராம் ஜெய ராம்..
நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசிறப்பான தரிசனம்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ராம் ஜெய ராம்..