நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
மாமன்னன்
ஸ்ரீராஜராஜ சோழப்
பெருந்தகையின்
பிறந்த நாள்..
ஐப்பசி சதயம் 1035..
இவ்வருடம்
விஜய தசமியும்
சதயமும் இணைந்து
வந்துள்ளன..
நேற்றைய தினம்
தஞ்சை பெரிய கோயிலில்
நிகழ்ந்த வைபவங்கள்
இன்றைய பதிவில்..
இவ்வருடத்தின்
மஹாபிஷேகத்தினை
தருமபுர ஆதீன
மடாதிபதிகள்
நடத்தியுள்ளனர்..
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
மேலே உள்ளது
விஜயதசமி அன்று
குதிரை வாகனத்தில்
அம்பாள் எழுந்தருளிய
திருக்காட்சி..
ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக..
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
ராஜராஜ சோழன் புகழ் உலகறியட்டும்...
பதிலளிநீக்குராஜராஜன் புகழ் வாழ்க.
பதிலளிநீக்குவாராஹியின் அபிஷேஹம் காணக் கிடைத்தது.சதயப் பெருவிழா பற்றிய தகவல்களும் படங்களும் அருமை! பெருவுடையாரின் அபிஷேஹமும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தேன். படங்களுக்கு நன்றி,
பதிலளிநீக்குசிறப்பு... படக் காட்சிகள் அளித்தவர்களுக்கு நன்றிகள்...
பதிலளிநீக்குசூரிய சந்திரர்கள் இருக்கும் வரை இந்த அரசனின் புகழும் இருக்கும். படங்கள் அருமை.
பதிலளிநீக்குராஜராஜன் பிறந்த ஜப்பசி சதயம் தஞ்சை பெரியகோவில் விழா படங்கள் அருமை.
பதிலளிநீக்குமகன் பிறந்த தினம். ஜப்பசி சதயம்தான் அவன் பிறந்த தினம்.
@ கோமதி அரசு, முன்னரும் சொன்ன நினைவு. உங்கள் அன்பு மகனுக்கு எங்கள் ஆசிகள், வாழ்த்துகள். எங்கள் சார்பாகச் சொல்லிடுங்க அவர்ட்டே! :)
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி கீதா.
பதிலளிநீக்குசொல்லிவிடுகிறேன் மகனிடம்.