நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திடவேண்டும்..
***
இன்று மதுரையம்பதியில்
ஸ்ரீ சுந்தரேசப் பெருமானுக்கும்
ஸ்ரீ மீனாக்ஷியம்மனுக்கும்
திருக்கல்யாணம்
ஸ்ரீ சுந்தரேசப் பெருமானுக்கும்
ஸ்ரீ மீனாக்ஷியம்மனுக்கும்
திருக்கல்யாணம்
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவ சிலை போற்றி
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
கரும்புருவ சிலை போற்றி
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம்
சிலம்பும் அடிகள் போற்றி!..
-: பரஞ்சோதி முனிவர் :-
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம்
சிலம்பும் அடிகள் போற்றி!..
-: பரஞ்சோதி முனிவர் :-
தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே நறை பழுத்த
துறைத் தீந்தமிழின் ஒழுகும் நறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர் சிமய
இமயப் பொருப்பில் விளை யாடும்
இளமென் பிடியே எறி தரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!..
-: குமரகுருபரர் :-
தாயே வருக.. எங்கள்
தமிழே வருக வருக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர் சிமய
இமயப் பொருப்பில் விளை யாடும்
இளமென் பிடியே எறி தரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!..
-: குமரகுருபரர் :-
தாயே வருக.. எங்கள்
தமிழே வருக வருக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
நேரடியாகப் பார்க்க முடியாது. நேரலையில் பார்க்கலாம். மதுரை வரலாற்றில் சித்திரைத் திருவிழா இப்படி முடங்கியது இதுவே முதல்முறையாக இருக்கும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மாலிக்காபூர் மதுரையைக் கொள்ளையடித்த அந்தக் காலத்திலும் திருவிழாக்கள் தடைபட்டிருக்கின்றன...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மீனாட்சி தாயே வருக
பதிலளிநீக்குஉலகை காத்தருள்க
அன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மீனாக்ஷியின் திருக்கல்யாணம் இப்படி எவரும் இல்லாமல் நடைபெறுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். பட்டர்கள் விடாமல் தங்கள் அளவுக்குச் செய்வது பெரிய விஷயம். நேரலையில் காணலாம் என்கிறார்கள். ஆனால் எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்புவதாகத் தெரியலை. பார்க்கணும்.
பதிலளிநீக்குவெப் டெலிகாஸ்டை நேரலை என்று குறிப்பிட்டிருப்பார்களோ? திருச்சூர் பூரம் திருவிழாவும் யாருமே இல்லாமல் நடைபெற்ற படம் வாட்ஸாப்பில் வந்தது. ?
நீக்குவடக்கேயிருந்து கொடூரன் மாலிக்காபூர் படையெடுத்து வந்து
நீக்குமதுரையைக் கொள்ளையடித்த போதும் மீனாக்ஷி அம்மன் கோயிலில் திருவிழாக்கள் பற்பல ஆண்டுகளுக்குத் தடைபட்டிருந்தன என்று வரலாறு உண்டு...
ஆமாம், அப்போ இருந்த மூலவரான மீனாக்ஷியைக் கொஞ்சம் பின்னம் ஆகி இருந்ததால் எடுத்துட்டு இப்போ உள்ள விக்ரஹம் வைத்தார்கள் எனச் சொல்வார்கள். பிராகாரத்தில் சுற்று முடிந்து வெளியே வரும் இடத்தில் படிகளில் மேலே ஏறிப் போனால் முந்தைய மீனாக்ஷியை முன்பெல்லாம் காணலாம். இப்போத் தெரியலை. படிகள் ஏற முடியாது என்பதால் போவதில்லை.
நீக்குமீனாக்ஷி அம்மை பிள்ளைத்தமிழ் பள்ளி நாட்களை நினைவூட்டியது. அழகான படங்களுடன் கூடிய புராணப் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குஅங்கு இன்றைய தொற்று தொற்றாமல் இருக்க வேண்டும்... அதுவே வேண்டுதல்...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..
நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி...
மீனாட்சியின் கருணையும், சுந்தரேஸ்வரரின் அருளும் உலக ரட்சிக்கட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குஇன்று திருக்கல்யாணத்தை புதுயுகம் , உள்ளுர் தொலைக்காட்சிகள் நேரடியாக் ஒலி பரப்பின.
பதிலளிநீக்குகலர்ஸ் தொலைக்காட்சி மட்டும் கோவிலில் வைத்து இருக்கும் இணையதள ஒலிப்பரப்பை காட்டியது.
எளிமையாக திருமணம் நடந்தேறியது.
மீனாட்சியின் கருணை கண் அருள் பார்வை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
காணொளியாக தந்தன.
பதிலளிநீக்குநேற்று கலர் தொலைக்காட்சியில் பதமா சுப்பிரமணியம் குழுவின்ருடன் மீனாட்சி கல்யாணம் நட்ட்ய நிகழ்ச்சி நடைபெற்றது இன்று நேரலை காட்சிகள்
பதிலளிநீக்குமீனாட்சி தேவியின் முதல் படம் அருமை. இரண்டாவது படமும் அழகு - கொண்டய ராஜு/டி சுப்பையா வரைந்தது அழகில் குறைவாகவா இருக்கும்!
பதிலளிநீக்கு