நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த திருப்பதிகம்..
இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 16
இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 16
திருத்தலம் - திருமணஞ்சேரி
இறைவன் - ஸ்ரீ உத்வாக நாதர், கல்யாண சுந்தரர்
அம்பிகை - கோகிலாம்பாள், குயிலார் மென்மொழியாள்
தலவிருட்சம் - ஊமத்தை
தீர்த்தம் - சப்தசாகரம்
இறைவனின் திருமணத் தலங்களுள்
இதுவும் ஒன்று..
அம்பிகை அமர்ந்த திருக்கோலம்..
இத் திருக்கோயிலில்
நவக்ரகங்கள் இல்லை..
இத்திருக்கோயிலை நினைத்து
நேர்ந்து கொண்டாலே
நல்லன நடக்கும் என்று ஐதீகம்..
இத்திருக்கோயிலை நினைத்து
நேர்ந்து கொண்டாலே
நல்லன நடக்கும் என்று ஐதீகம்..
மயிலாடுதுறை கும்பகோணம்
நெடுஞ்சாலையில் உள்ளது குத்தாலம்..
குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் செல்லும்
சாலையில் சற்றே வலப்புறமாகச் சென்றால்
எதிர்கொள்பாடி எனும் தலத்தை அடுத்துள்ளது
திருமணஞ்சேரி...
குத்தாலத்தில் இருந்து
சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன..
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வா னைப்பற்றி நின்றார்க் கில்லை பாவமே.. 1
விதியானை விண்ணவர் தாம்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.. 2
எய்ப்பனார்க்கு இன்புறு தேனளித்து ஊறிய
இப்பால் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார்வினை வீடுமே.. 3
விடையானை மேலுகம் ஏழும்இப் பாரெலாம்
உடையானை ஊழி தோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல் லார்க்கில்லை அல்லலே.. 4
எறியார்பூங் கொன்றை யினோடு இளமத்தம்
வெறியரும் செஞ்சடை ஆரம் இலைத்தானை
மறியாரும் கையுடை யானை மணஞ்சேரி
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.. 5
மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை ஏத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.. 6
எண்ணானை எண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே.. 7
எடுத்தானை எழின்முடி எட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.. 8
சொல்லானைத் தோற்றங் கண் டானு நெடுமாலும்
கல்லாதனக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே.. 9
சற்றேயும் தாமறிவில் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.. 10
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.. 11
- : திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வா னைப்பற்றி நின்றார்க் கில்லை பாவமே.. 1
விதியானை விண்ணவர் தாம்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.. 2
எய்ப்பனார்க்கு இன்புறு தேனளித்து ஊறிய
இப்பால் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார்வினை வீடுமே.. 3
விடையானை மேலுகம் ஏழும்இப் பாரெலாம்
உடையானை ஊழி தோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல் லார்க்கில்லை அல்லலே.. 4
எறியார்பூங் கொன்றை யினோடு இளமத்தம்
வெறியரும் செஞ்சடை ஆரம் இலைத்தானை
மறியாரும் கையுடை யானை மணஞ்சேரி
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.. 5
மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை ஏத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.. 6
எண்ணானை எண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே.. 7
எடுத்தானை எழின்முடி எட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.. 8
சொல்லானைத் தோற்றங் கண் டானு நெடுமாலும்
கல்லாதனக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே.. 9
சற்றேயும் தாமறிவில் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.. 10
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.. 11
- : திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
ஓம் நமச்சிவாய... சிவம் தம்மைக் காக்கட்டும்.
பதிலளிநீக்கு*நம்மை
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
சிவம் நம்மை என்றும் காக்கட்டும்...
மகிழ்ச்சி.. நன்றி..
திருமணஞ்சேரியில் திருமணத்துக்குமுன் பாஸ் நேர்ந்துகொண்ட பிரார்த்தனையை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குமுன்(தான்) சென்று நிறைவேற்றினோம்.
பதிலளிநீக்குநாம் என்னதான் நேர்ந்து கொண்டாலும்
நீக்குஅதை நிறைவேற்றுவதற்கு நேரம் வரவேண்டும்...
இதுவே பெருங்கதை..
2,3 முறை போயிருக்கேன், மாப்பிள்ளைச்சாமியை தரிசிக்க. பிரார்த்தனைகள் ஏதும் இல்லை. அவரைப் பார்க்கவென்றே போனோம். அங்கே கதையில் சபாபதி போயிருக்க வேண்டிய இடம். போகாமலே அவனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இங்கே வந்து தரிசிப்போர் அனைவருக்கும் நல்லபடி திருமணம் நடைபெறும். அனைவருக்கும் இப்போவே வாழ்த்திடுவோம்.
பதிலளிநீக்குஅருமையான தரிசனத்துக்கு நன்றி, இதே போல் எங்க பெண்ணிற்காகவும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாளிடம் நேர்ந்து கொண்ட ஒரு பிரார்த்தனை இன்னமும் முடிக்கலை. காலமும், நேரமும் கூடி வரும்போது நிறைவேறும் என நம்புகிறோம்.
பதிலளிநீக்குஇங்கும் திருமணஞ்சேரி வருகிறதே...
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
பலமுறை சென்றுள்ளேன். இன்று உங்கள் தயவால். நனறி.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள். இங்கே சென்றதில்லை. சகோதரியும் பெற்றோர்களும் சென்று வந்ததாக நினைவு.
பதிலளிநீக்குதிருமணஞ்சேரி இறைவனை வணங்கி கொண்டேன். பதிகமும் படித்தேன்.
பதிலளிநீக்குநிறைய தடவை போய் இருக்கிறோம்.
சபாபதி திருமண்ஞ்சேரி போக நினைத்தவுடன் மணம் முடிந்து விட்டது.
திருமணம் முடிந்தவுடன் சென்று வணங்கி வரட்டும்.