நீலமயில் மண்ணில் தானே தோகை விரித்தாடும்!..
ஆனால் - இன்று காலம் மாறிவிட்டதால் -
மயில்கள் நீல வானிலும் ஆடி மகிழ்வித்திருக்கின்றன.
தஞ்சை விமானப் படைத் தளத்தில் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்திருக்கின்றன..
ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க -
விமானப் படையின் வீரர்கள் - நான்கு ஹெலிகாப்டர்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர்.
தஞ்சைக்கு முதலாவதானது - இந்நிகழ்ச்சி..
முன்னதாக - தஞ்சை விமான தளத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் -
திரு. பிரசாந்த் குப்தா அவர்கள் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பின்படி -
இந்திய விமானப் படையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே இந்நிகழ்ச்சி என அறிய முடிகின்றது.
ஹெலிகாப்டரில் பறந்து சாகசம் செய்யும் குழுக்கள் - இரண்டு மட்டுமே!..
மயில்!.. (Sarang, The helicopter aerobatic display team of the Indian Air Force..)
நீலக் கழுகு!.. (Blue Eagles of the British Army.) பிரிட்டிஷ் ராணுவத்தின் குழு.
இன்று சாகச நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு முன் - ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் ஒத்திகைகள் நடந்துள்ளன..
நிகழ்வின் படங்களை Facebook - ல் வழங்கிய Thanjavur pages மற்றும் செந்தில்குமார் பாலகிருஷ்ணன் (Thanjavur City ) ஆகியோருக்கு நன்றி..
அந்தப் படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் - என,
திரண்டு வந்து கண்டு களித்தனர்.
சாகசங்களை நிகழ்த்திய வீரர்களை - ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் கண்களில் அகலாதிருந்தது - பிரமிப்பு!..
அதுவே -

மயில் - எனும் பெருமைக்குரிய குழுவினரை உடையது நம்நாடு!..
மற்றது -
நீலக் கழுகு!.. (Blue Eagles of the British Army.) பிரிட்டிஷ் ராணுவத்தின் குழு.
இன்று சாகச நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு முன் - ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் ஒத்திகைகள் நடந்துள்ளன..
மேலும் - ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் -
இந்திய விமானப் படையின் ஆகாஷ் கங்கா எனும் (“Akash Ganga” The IAF skydiving team.,) குழுவினைச் சேர்ந்த பத்து வீரர்கள் பாராசூட் மூலமாக - விமானத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளனர்.
ஏழாயிரம் அடி உயரத்தில் பறந்த (AN 32) விமானத்திலிருந்து - குழுத் தலைவர் கஜானந்த் யாதவ் - தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் முதலில் தரையிறங்கினார்.
அவரைத் தொடர்ந்து மற்ற ஒன்பது வீரர்களும் தரையிறங்கினர்..

இந்த ஆகாஷ் கங்கா குழுவினர் - வட துருவத்திலும் தென் துருவத்திலும் முத்திரை பதித்தவர்கள் என்பது பெருமைக்குரிய செய்தி..
தஞ்சை விமான தள உயரதிகாரி திரு. ஷிண்டே அவர்கள் , மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன் அவர்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னைலையில் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.
நிகழ்ச்சிகளை நாம் நேரில் காணவில்லை எனினும் -
நிகழ்வின் படங்களை Facebook - ல் வழங்கிய Thanjavur pages மற்றும் செந்தில்குமார் பாலகிருஷ்ணன் (Thanjavur City ) ஆகியோருக்கு நன்றி..
அந்தப் படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் - என,
திரண்டு வந்து கண்டு களித்தனர்.
சாகசங்களை நிகழ்த்திய வீரர்களை - ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் கண்களில் அகலாதிருந்தது - பிரமிப்பு!..
அதுவே -
தஞ்சை மண்ணில் முதல் முறையாக
இந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய
சாகச விளையாட்டுக்குக் கிடைத்த வெற்றி!..
வாழ்க பாரதம்!..
ஜய்ஹிந்த்!..
* * *