நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 30, 2023

திங்களூர் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 14
வியாழக்கிழமை


 
திங்களூர் ஸ்ரீ கயிலாயநாதர் கோயிலுக்கு அருகே ஸ்ரீ மூங்கில் அமர்ந்தாள் ஈஸ்வரி எனும்  பெயருடன்  திருக்கோயில்..

குல தெய்வக் கோயிலாக நிர்வகிக்கப்படுகின்றது..



இக்கோயிலுக்கு முன்பாக ஸ்ரீ கருப்ப ஸ்வாமி பீடங்கள்..

பெரிய அளவிலான இரண்டு அரிவாள்கள்  ஒரு மாத்தடி ஆகியன கிழக்கு நோக்கி இருக்கின்றன.. பீடத்தில்  கருப்பர், சங்கிலி கருப்பர் என பெயர்கள் ..


தெற்கு நோக்கி விளங்கும் பீடத்தில் 
ஒரு அரிவாள்  ஒரு சூலம் ஒரு வாள் ஆகியன 
முன்னோடி கருப்பர், வீரன் என்ற பெயர்கள்..



இக்கோயிலில் சப்த மாதர் எனும் நவ கன்னியர் மூலஸ்தானத்தில் வீற்றிருக்க 
ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாப்பாத்தியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டவர்  - என சந்நிதிகள் உள்ளன..
















பெரிய வேம்பும் மணி மண்டபமும் அணி செய்கின்றன..

திருக்கோயில் உச்சிப் பொழுதில் மட்டுமே திறக்கப்படுகின்றது.. 


திரளான பெண்கள் கோயிலின் உள்ளிருந்ததால் உட்புறத்தில் படம் பிடிக்கவில்லை.. 


நவ கன்னியர் திருவடிகள் போற்றி..

ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

புதன், நவம்பர் 29, 2023

திங்களூர் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 13 
புதன் கிழமை


 
திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயில் குடமுழுக்கு காட்சிகள் தொடர்கின்றன..




























உட்பிரகாரத்தை அடுத்து உபயதாரர்களால் முழு அளவில் புதிதாக வெளித் திருச்சுற்றும் கருங்கல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.. 


இப்போது இக்கோயிலில் உபயதாரர்களால் புதிதாக கிழக்கு ராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது..



அறம் வளர்த்த அப்பூதியடிகளின் வழியினைப் பின்பற்றி சிவகண திருக்கூட்டத்தினரால் மதியம் திரு அமுதும் வழங்கப் பெற்றது..


மீண்டும் திங்களூர் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் போது காட்சிகள் சிறப்பாக அமைவதற்கு பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..
**
அப்பூதியடிகள் போற்றி
திருநாவுக்கரசர் போற்றி
கயிலாய நாதர் போற்றி போற்றி..
**
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***