நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 9
சனிக்கிழமை
நாளை ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை..
திருக்கார்த்திகை நாளன்று வீட்டில் இருபத்தேழு இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு
அதன்படி வீட்டில்
எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது?.. - என்பதைக் குறித்த விவரங்கள்...
விளக்குகளின் எண்ணிக்கை
ஸ்ரீரங்கம் தளத்தில் பெறப்பட்டது..
மேலும் ஒழுங்கமைவு செய்திகளுடன் இன்றைய பதிவு.
தலை வாசலில்
பச்சரிசி மாவினால் கோலமிட்டு அந்தக் கோலத்தில் பசு நெய்யுடன் கூடிய ஐந்து விளக்குகள்..
(நடுவில் ஒன்று சுற்றிலும் நான்கு)
இதர விளக்குகளில் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே..
திண்ணைகளில் நான்கு விளக்குகள்..
மாடத்தில் இரண்டு விளக்குகள்..
நிலைப்படியில் இரண்டு விளக்குகள்..
நடைகளில் இரண்டு விளக்குகள்..
முற்றத்தில் நான்கு விளக்குகள்..
பூஜையறையில் இரண்டு விளக்குகள். (இதனால் சர்வ மங்கலங்களும் உண்டாகும்)
சமையலறையில் ஒரு விளக்கு.
(அன்ன தோஷம் ஏற்படாது)
பின்கட்டு நான்கு விளக்குகள்.
(விஷப் பூச்சிகள் அணுகாது)
பின் வாசலில் ஒரு விளக்கு.
(தெற்கு நோக்கிய யம தீபம். இதனால் மரண பயம் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும்)
ஆனால், முன் வாசல், மாடம், நடை, முற்றம் - அற்றதான நவீன வீடுகளும் தொகுப்பு வீடுகளும் அதிகமாகி விட்ட தற்காலத்தில், மேற்கண்ட முறைப்படி விளக்கு ஏற்றுதல் இயலாது..
ஆகையால்,
சூழ்நிலை வசதிக்கு ஏற்றபடி வெளியிலும்
வீட்டுக்குள்ளுமாக இருபத்தேழு விளக்குகளை ஏற்றி வைத்து நற்பலன்களைப் பெறுவோம்..
இப்படி திருவிளக்கு ஏற்றி வைப்பதால்
தீய சக்திகள் விலகியோடும்..
மேற்குறித்தபடி விளக்கு ஏற்றும் போது நெய், விளக்கெண்ணெய் நல்லெண்ணெய் இவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..
நறுமணம் ஏற்றப்பட்ட எண்ணெய் வகைகள் எவையும் உகந்தவை அல்ல..
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..
-: பூதத்தாழ்வார் :-
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
-: திருவள்ளுவர் :-
**
ஓம்
தீப மங்கல ஜோதி நம
தீப லக்ஷ்ம்யை நமோ நம:
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
இந்தக் கால வீட்டில் முற்றத்துக்கும், மாடத்துக்கும், பின் வாசலுக்கும் எங்கே போவது என்று யோசித்த வேளையில் அடுத்த வரியில் நீங்களே சொல்லி விட்டீர்கள்!
பதிலளிநீக்குஇருப்பதைக் கொண்டு சிறப்பித்துக் கொள்ள வேண்டியது தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
முன்னெல்லாம் கார்த்திகை தீபம் ஏற்றவென்றே எண்ணெய் வாசலில் கொண்டு வருவாங்க. இலுப்பெண்ணெய் என நினைக்கிறேன். அந்தக் காலமெல்லாம் இப்போ மலை ஏறிப் போச்சு. கடலை எண்ணெயில் கூட தீபம் ஏற்றி விடுகின்றனர்.
பதிலளிநீக்குஅதெல்லாம் பொற்காலம்..
நீக்குஇது பூஜா ஆயில்களின் காலம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா..
தீபம் ஏற்றுவது பற்றிய விவரம் அருமை.
பதிலளிநீக்குதீபம் ஏற்றி வைத்து இறைவனை வேண்டுவோம்.
சர்வ மங்கலமும் பெருகட்டும்.
கார்த்திகை தீப வாழ்த்துகள்.
/// தீபம் ஏற்றி வைத்து இறைவனை வேண்டுவோம்.///
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
கார்த்திகை தீப வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிளக்கு ஏற்றும் முறை பற்றி விரிவான விளக்கம் அறிந்தோம்.. நன்றி.
தங்களுக்கும் நல்வாழ்த்துகள்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..