நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 20
புதன்கிழமை
நன்றி: விக்கி
விக்கியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் இது..
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
பக்கம் 62
வல்லிக்கண்ணன்
சுவாமிகள் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடிய சந்நிதி முறைப் பாடல்களில் ஒன்று:
ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு..
மாம்பலம் தெய்வசிகாமணி முதலியாரவர்கள் வீட்டில் ஒரு சமயத்தில் பிரசங்கத்தில் இப்பாட்டைச் சொன்னார்கள்..
சொல்லி அப்படியே சில நிமிஷ நேரம் கண்ணீர் உகுத்தபடியே இருந்து விட்டார்கள். பிறகு தான் சுய நினைவு வந்து, "நம : பார்வதி பதயே" என்ற முழக்கத்தோடு மீண்டும் பேச்சைத் தொடங்கினார்கள்..
மற்றொரு பாடலும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாடலை உச்சரிக்கின்ற முறையினாலே, இதுவே கேள்வியாகவும் இதுவே விடையாகவும் அமைந்துள்ளது..
இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
நல்லறத்து ஞானி யல்லேன் நாயினேன்
சொல்லறத்துள்
ஒன்றேனும் இல்லேன் உயர்த்ததிருப் போரூரா
என்றேதான் ஈடேறு வேன்.
இந்தச் சிதம்பர சுவாமிகள் பாடலை அடிக்கடி தோத்திரப் பாடலாகவே பாடுவார்கள். "உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்?" என்று கூறும்போது, தொனியால் "திருப்போரூர் முருகப் பெருமானே! என்றைக்குத்தான் நான் கடைத்தேறப் போகிறேன்?.. " - என்று இரங்குவதாகிய கேள்வி..
மாஸ்டர்
சூரிய நாராயணன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும்..
முருகா
முருகா..
***
சுவாரஸ்ய தகவல். மாஸ்டர் சூரி பாடியது கேட்டு உருகினேன். சிந்துபைரவி ராகம் போலும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் இது சிவரஞ்சனிஅலல்து அதை ஒட்டிய நீலமணி ராகம். மதுரை சோமு அவர்களின் "என்ன கவி பாடினாலும்" கேட்டிருப்பீங்களே.
நீக்குகீதா
இந்த இர்ண்டு ராகங்களும் உருக வைக்கும் ராகங்கள்
நீக்குகீதா
இந்த வயதிலேயே இவ்வளவு உச்ச ஸ்ருதியில் பாடுகிறானே அருமை
பதிலளிநீக்குமுருகா சரணம்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபதிவு நன்று. மாஸ்டர் சூரியநாராயணன் குரலில் சில பாடல்கள் கேட்டிருக்கிறேன். இந்த பாடலும் கேட்கிறேன்.
மாஸ்டர் சூரியநாராயணன் என்னமா பாடுகிறார் இந்த இளம் வயதில். கேட்டு அப்படியே மெய்மறந்து போனேன். கணீர் குரல், பக்தி ரசம் அந்தக் குரலில்
பதிலளிநீக்குகீதா
திருப்போரூர் முருகன் பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன். சூரிய நாராயணன் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். சிறு வயதிலேயே நல்ல உச்சரிப்புடன் தெளிவாக பாடுவது இறைவனின் கருணை. பாடல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசூரியநாராயணன் பாடுவதை அடிக்கடி கேட்டிருக்கேன். நல்ல குரல் வளம். நல்ல பக்தியும் கூட. அருமையான பதிவுக்கும் பாடல் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு