நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம் - திரு இரும்பூளை
தற்போது ஆலங்குடி
இறைவன்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ ஏலவார்குழலி
தீர்த்தம்
அமிர்த புஷ்கரணி
ஞான கூபம்..
தல விருட்சம்
பூளைச் செடி..
ஒருசமயம் தேவர்களைக்
காத்தருளியதால்
ஸ்ரீ விநாயகருக்கு
கலங்காமல் காத்த விநாயகர்
எனத் திருப்பெயர்..
தலவிருட்சத்தின்
பெயரால் விளங்கும்
தலங்களுள்
இதுவும் ஒன்று..
எல்லா சிவாலயங்களிலும்
தெற்குக் கோட்டத்தில்
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி என
விளங்கும்
ஆலமர் செல்வனின் சந்நிதி
இங்கு பிரசித்தம்..
கும்பகோணத்திலிருந்து
மன்னார்குடி செல்லும் வழியில்
நீடாமங்கலத்துக்கு
சற்று முன்பாக
அமைந்துள்ளது இத்தலம்...
எல்லாம்வல்ல இறைவன்
குரு ஸ்தானத்தில் இருந்து
குறைகளைத் தீர்த்தருள்வதாக
நம்பிக்கை..
Fb ல்
கிடைத்த காணொளி
சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்
வாரார் முலைமங் கையொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ்சம் அமுதுண்ட கருத்தே.. (2/36)
-: திருஞானசம்பந்தர் :-
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ