தமிழமுதம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..(1031)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் எனப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொருநாள்
மாவாய்ப் பிளந்த மகன்..(2209)
-: பூதத்தாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
புள்ளிருக்கு வேளூர் - வைத்தீஸ்வரன்கோயில்
ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட திருத்தலம்..
ஜடாயு உய்வடைந்த திருத்தலம்..
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. (2/43)
-: திருஞானசம்பந்தர் :-
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.. (6/54)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***
***
-: அபிராமிபட்டர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***