நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 19, 2019

மார்கழி தரிசனம் 03

தமிழமுதம்

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.. (0398)

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 03


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஆழ்வார் அமுதம்



இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. (2110)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்!..
***

சிவதரிசனம்
திருப்பூந்துருத்தி

ஸ்ரீ புஷ்பவன நாதர் - திருப்பூந்துருத்தி 
மூவனாய் முதலாய் இவ்வுலகு எலாம்
காவனாய்க் கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத்திந் நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே..(5/32)
-: திருநாவுக்கரசர் :-
*** 

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த 
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 03


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணைக் காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்


கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னைநயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என்னம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012) 
-: அபிராமி பட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் ...
      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. அனைத்து தரிசனங்களும் கிடைக்கப் பெற்றேன். நன்றி. திருப்பூந்துருத்தி போனதில்லை. இப்படி நிறைய இருக்கு!

    பதிலளிநீக்கு
  3. பாடல்களில் துய்த்து இன்புற்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தெய்வ தரிசனங்கள் காலைவேளைக்கு அமிர்தம்.
    அதுவும் மார்கழிப் பாடல்களோடு, அபிராமி அந்தாதி
    படித்து மனனம் செய்து அருள் நிரம்புகிறது நன்றி
    அன்பு துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இன்னும் விரிவாகச் செய்ய ஆசைதான்...
      இணையம் ஒத்துழைப்பதில்லை...
      தற்போது பகலில் வேலையாகிப் போனதால் சிரமமாக இருக்கிறது..
      நன்றியம்மா..

      நீக்கு
  7. வற்றாது கை கொடுக்கும் திருப்பாவையும்திருவெம்பாவையும் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      திருப்பாவையும் திருவெம்பாவையும் வாழ்க...

      நன்றி..

      நீக்கு
  8. இனிய பாடல்களோடு இறை தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. தரிசனம் காண இரவு ஆகி விட்டது.
    திருப்பாவை, தெருவெம்பாவை பாடல்களும் அம்மன், சுவாமி, பெருமாள் தரிசனம் மிக அருமை.

    இன்று அத்தையின் நினைவு நாள். அதனால் இங்கு வர காலதாமதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை வேலைகளுக்கிடையேயும்
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..