தமிழமுதம்
அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.. (096)
***
அருளமுதம்
ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்
* * *
சிவ தரிசனம்
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரசே..
-: மாணிக்கவாசகர் :-
-: மாணிக்கவாசகர் :-
* * *
தேவி தரிசனம்
வாள்நுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும்அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!.. (040)
-: அபிராமிபட்டர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *
படித்தேன், ருசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி.. நன்றி...
தரிசனம் நன்று ஜி
பதிலளிநீக்குமிக சிறப்பு....
பதிலளிநீக்குஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆண்டாள் திருவடிகள் போற்றி...
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குபடங்களும், பாடல்களும் அருமை.
அபயாம்பிகை தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி.
அபயாம்பிகை தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி...
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அபயாம்பாள் அழகோ அழகு! கோயிலில் நிதானமாகப் பார்க்கவிடவில்லை. :( பரிமளரங்கனையும் பார்த்தது குறித்து எழுதவே இல்லை. எல்லாம் காலையில் அருமையான தரிசனம். மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குபரிமளரங்கன் தரிசனம் பற்றி எழுதுங்கள்.
மகிழ்ச்சி.. நன்றியக்கா...
தமிழமுதத்தையும் பூதத்தாழ்வாரின் ' அன்பே தகளியாய்' பாடலையும் படிக்க மனதிற்கு நிறைவாயிருந்தது. சிறப்பான பதிவு!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....
நீக்குசிறப்பான பாடல்கள். திருவாசகத் தேன் - திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்...
பதிலளிநீக்குதொடரட்டும் தேனான பதிவுகள்.
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் - உண்மை...
நீக்குஅன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...