நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..
நம சிவாய
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
ஞாயிறு, செப்டம்பர் 26, 2021
கோவிந்த ஸ்வரூபிணி
சனி, செப்டம்பர் 25, 2021
கோவிந்த தரிசனம் 2
வியாழன், செப்டம்பர் 23, 2021
அன்பினில்..
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
ஞாயிறு, செப்டம்பர் 19, 2021
தென்னாங்கூர் தரிசனம்
சனி, செப்டம்பர் 18, 2021
கோவிந்த தரிசனம் 1
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதியின் திருப்பாசுரங்கள் சிலவற்றுடன்
ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் திருவடித் தாமரைகளைச் சிந்திப்போம்...
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன் மாலை இடராழி நீங்குகவே என்று.. (2082)
வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம் தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு ஊணாக உண்டான் உருவொடு பேரல்லால் காணாகண் கேளா செவி.. (2092)
பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் அடலோத வண்ணர் அடி.. (2097)
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய் தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும் மருதிடைபோய் மண்ணளந்த மால்.. (2099)
மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று.. (2100)
பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.. (2101)
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண் முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு.. (2155)
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள் ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி.. (2156)
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***
ஞாயிறு, செப்டம்பர் 12, 2021
திகழொளி ஞாயிறு 4
சனி, செப்டம்பர் 11, 2021
நேரம் முழுதும்
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
வெள்ளி, செப்டம்பர் 10, 2021
கணபதி தரிசனம்
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
***
தேவேந்திரன் செய்வதறியாது திகைத்து நின்றான்...
அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அருகில் இருந்த எவருக்கும் தெரியவில்லை..
இத்தனை களேபரத்தினூடாக விஷயம் மெல்லக் கசிந்தது..
" இவன் அமுதக் கலசத்தை எங்கோ ஒளித்து வைத்து விட்டு நாடகம் ஆடுகின்றான்!.. "
" எனக்கு அப்பொழுதே தெரியும்!.. இவன் இப்படிச் செய்வான் என்று!.. "
திரண்டிருந்த அசுரர் கூட்டத்தினுள்ளிருந்து கலகக் குரல்கள் எழுந்தன...
மீண்டும் ஆயுதங்களைத் தூக்குவதற்குத் தயாராகினர்
வீண் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத நல்லோர் சிலர் -
இந்திரனை இழுத்துக் கொண்டு வந்து நான்முகனின் எதிரில் நிறுத்தினர்...
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்றே!.. எத்தனை எத்தனை ப்ரயத்தனம் செய்து கடலைக் கடைந்து அமுதத்தினைப் பெற்றோம்!..
இப்போது அமுதக் கலசத்தைக் காண வில்லையே.. மாயமாக மறைந்தது எப்படி!?..
பேசுதற்கு ஒரு வார்த்தையும்் இன்றி விக்கித்து நின்றான் தேவேந்திரன்..
" நானே அனைத்தும் அறிவேன்.. என்ற ஆணவம் தான் உனக்கு அதிகம்.. ஆனால், எதைச் செய்ய வேண்டும்.. எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறியவே மாட்டாய்.. உன்னால் விளைந்த விபரீதங்களே அதிகம் என்பதை உணர்வாயாக!... "
நான்முகனின் திருமுன் தலைகவிழ்ந்து நின்றிருந்தான் - தேவேந்திரன்...
" இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.. வழி காட்ட வேண்டும்.. தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு ஓர் உபாயம் அருளல் வேண்டும்.. "
" தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு வழி ஒன்றைக் கேட்கின்றாய்.. வழி எங்கும் வீற்றிருந்து தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளையினை நீ அறிந்திலையோ!.. "
" தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளை!.. யார் அது?.. "
மோதகங்களையும் கருப்பஞ் சாற்றையும்
பணிவுடன் சமர்ப்பித்து நின்றான் - தேவேந்திரன்..
அந்த அளவில் தேவேந்திரனின் அகங்காரம் உடைந்து சிதறியது..
ஆற்றாமையால் கண்ணீர் பெருக்கெடுத்தது.
" சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவினுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தில் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரை கழல் சரணே.. சரணே!.. "
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர் - அனைவரும்..
விநாயகப் பெருமான் முகமலர்ந்து புன்னகைத்தார்..
அந்தாதி பாடிய அபிராமி பட்டர் கள்ள வாரணப் பெருமானின் மீது பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்..
கருணை வேண்டி நிற்கும் எவர்க்கும் நல்லருள் புரியும் நாயகன்..
நம்மைக் கலங்காமல் காத்தருள்வான்..
எளிமைக்கு எளிமையானவர் விநாயகப் பெருமான்..
திருப்புன்கூரில் நந்தனார் ஸ்வாமிகளின் பொருட்டு - திருக்குளம் அமைத்துக் கொடுத்த ஞானமூர்த்தி...
திருநாரையூரில் நம்பிக்கு எல்லாமும் தானே உரைத்து ஆளாக்கி வைத்தார்.
தில்லையில் ராஜராஜசோழனுக்கு தேவாரத் திருமுறைகளைக் காட்டியருளினார்..
திருஆரூரில் - சுந்தரருக்காக பொன்னை உரசி மாற்றுரைத்தார்..
உப்பூரில் - அடியவருக்காக வெயிலுகந்து விளங்குகின்றார்..
அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த
காவிரி மீள்வதற்குக் காரணம் காக்கை வடிவாகிய கணபதியே!..