நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 31, 2023

சதய விழா

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 14
செவ்வாய்க்கிழமை

பெரிய கோயிலின் சதய விழா காட்சிகள் தொடர்கின்றன..

கூட்ட நெரிசலைத் தவிர்த்து இயன்ற வரை எடுத்திருக்கின்றேன்.. 

சாலையில் இடப்பட்டிருந்த ஆடம்பர மின்னொளிப் பந்தல்களைப் படம் பிடிப்பதற்கு நாட்டமில்லை..









சிற்பத்தின் உயரம்






நவராத்திரியை முன்னிட்டு 
அமைக்கப்பட்டிருந்த கொலு தர்பார்..











அன்று இரவு ஸ்வாமி வீதியுலா 
திருக்கோலம்
(நன்றி: தஞ்சாவூர் Fb)




மாமன்னர் புகழ் வாழ்க 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், அக்டோபர் 30, 2023

அன்ன லிங்கம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
திங்கட்கிழமை

தஞ்சை ஸ்ரீ பெருவுடையார்
அன்னாபிஷேகத்திற்காக
சிவ பக்தர்களால் 
1,000 கிலோ பச்சரிசியும் 900 கிலோ 
காய் கனிகளும் வழங்கப்பட்டன..

பக்தர்கள் வழங்கிய அரிசியை சோறாக்கி பெருவுடையார் திருமேனியில் சாற்றியதுடன் காய்கள் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நிகழ்ந்த மகா தீப ஆராதனையை ஆயிரக்கணக்கான அடியார்கள் தரிசித்தனர்.. 

தொடர்ந்து லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும் கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப் பெற்றது..
 

மேலும் சில படங்கள்
 நன்றி
திரு. அகில்.
 
திருவலஞ்சுழி
ஸ்ரீ கபர்தீசர்



திருக்கோடிகா
ஸ்ரீ கோடீஸ்வரர்



திருவட்டத்துறை
ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர்








இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி  உள்ளது
பல்லக விளக்கது
  பலரும் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, அக்டோபர் 29, 2023

திகட்டா அமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12
ஞாயிற்றுக்கிழமை

நேரம் அமையும் போதெல்லாம் புன்னை நல்லூருக்குப் புறப்பட்டு விடுவோம்..

அதிகாலை ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் கோயில் திறந்திருக்கும்.. 

ஞாயிறு செவ்வாய் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களின் மதியப் பொழுதுகள் நெரிசல் இல்லாமல் இருக்கும்..

அன்னையைத் தரிசித்த பிறகு 
அங்கும் இங்குமாகப் படம் எடுப்பதே வேலை..

இதனால் பதிவில் திரும்பத் திரும்ப கோயில் படங்கள் வருவதை தவிர்க்க இயலவில்லை..
 
முன் மண்டபத்தில் ஸ்ரீ காளியம்மன் - ஐயனார்..


மன்னர் துளஜா

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்









 நிழற்கூரை 





மராட்டியர் காலத்து மண்டபத்துத் 
தூண்களில் இது மாதிரி சிதைவுகள் 
காணப்படுகின்றன..






இங்கே உடைபடும் தேங்காய்களின் நீரை மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட  உபகரணங்கள் 
ஒரு ஓரமாக இருக்கின்றன.. 






மூன்றாம் திருச்சுற்றில்
புன்னையும் வேம்பும் 
நாக பிரதிஷ்டைகளும்
உள்ளன..



விளக்கு நாச்சியார்

புண்ணியமே பூத்ததம்மா
புன்னை எனும் பூவனத்தில்
பொங்குநலம் எல்லாமும்
பூத்துவரும் இவ்விடத்தில்..

மண்ணளந்த நாயகியும்
மடியளக்கும் பூவனத்தில்
மங்கலங்கள் தான்தருவாள் 
மனங்கொண்ட பேரிடத்தில்..

திகட்டா அமுதெனத் திகழ்கின்ற தாயே..
திருமுகங் காட்டித் திரு அருள்வாயே..
திக்கெல்லாம் ஆள்கின்ற திருவுடையாளே
தீவினை தீர்த்து துணை வருவாயே..

எல்லாம் அறிந்தவள் உன்னிடத்தில்
ஏதெனச் சொல்வேன் என் குறையை..
எல்லாம் அறிந்தவள் நீயே நீயே முன்னின்று 
காத்திடு காத்திடு காத்திடுவாயே..
**
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
 
ஓம் சிவாய  திருச்சிற்றம்பலம்
***