நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சரஸ்வதி பூஜை
ஐப்பசி 6
திங்கட்கிழமை
மங்களகரமான நவராத்திரியின்
ஒன்பதாம் நாள்
அன்பின் இனிய
சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துகள்
தும்பிக்கையான் திருப்பாதங்களைத்
தப்பாமல் சார்வார் தமக்கு வாக்குண்டாம்.. நல்ல மனமுண்டாம்.. - என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு..
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால் - என்கின்றார் அருணகிரிநாதர்..
வேழனும் வேலனும் இப்படி என்றால் இவர்களைப் பெற்றெடுத்த பெருங்கொடையாள் ஆகிய உமையாம்பிகை பேசுதற்கும் அரியவள்..
திருவரங்கத்தின் மடைப்பள்ளி வரதனுக்கு தாம்பூல சேஷம் வழங்கி கவிராஜ காளமேகம் என்று ஆக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்தவள் திரு ஆனைக்காவின் அகிலாண்டேஸ்வரி..
அம்பிகை - அவள்
சொல்லும் பொருளும் - என நின்றாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியாள்!..
கும்பகோணம் வியாழ சோமேஸ்வரத்தில் தேனார் மொழியாள்
திருப்புறம்பியம் தலத்தில் கரும்பன்ன சொல் உமையாள்
திருமறைக்காடு தனில்
பண்ணின் நேர் மொழியாள்
- என்று திகழ்கின்ற அவள் -
பண்ணார் மொழி மங்கை,
தேனை வென்ற மொழியாள்,
கரும்பின் இன் மொழிக்காரிகை,
கிளி மழலை உமையாள்,
பண் தனை வென்ற இன்சொல் பாவை,
தேனார் மொழி உமையாள்,
யாழைப் பழித்த மொழியாள் - என்றெல்லாம்
பலவாறாக -
தேவாரத் திருப்பதிகங்களில் புகழப் பெறுகின்றாள்..
இந்நாளில் ஜகன்மாதாவாகிய அம்பிகையை ஸ்ரீ ஞான சரஸ்வதியாகப் போற்றி வணங்கி எல்லா நலன்களையும் பெற்று வாழ்வோம்..
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
அருளிச் செய்த
ஸ்ரீ சரஸ்வதி அந்தாதி
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி..
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த என்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1
வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2
உரைப்பார் உரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்லரோ தண் தரளமுலை
வரைப்பால் அமுதுதந்து இங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண் தாமரைப்பதி மெல்லியலே. 3
இயலானதுகொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு
முயலா மையால்தடு மாறுகின்றேன் இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. 4
அருக்கோ தயத்தினும் சந்திரோதயம் ஒத்த அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானும் எப்போதும் இனி திருக்கும்
அருக்கோல நாண்மல ராள் என்னை ஆளும் மடமயிலே. 5
மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேஇனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள் இருப்பஎன் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவது எனக்கினியே. 7..
(முதல் ஏழு கண்ணிகள் மட்டும்)
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா..
*
ஓம் மஹா சரஸ்வத்யை நம:
ஓம் சக்தி ஓம்
ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***
சிறப்பான பதிவு. சரஸ்வதி அந்தாதி அருமை. சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அன்பின் நல்வாழ்த்துகள்..
இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
அன்பின் நல்வாழ்த்துகள்..
உங்களுக்கும் சரஸ்வதி பூசை நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. அன்னையின் அழகிய படங்களுடன்.
அம்பிகையின் அருள் சகலருக்கும் கிடைக்க வேண்டுவோம்.
ஓம் சக்தி ஓம்.
அம்பிகையின் அருள் சகலருக்கும் கிடைப்பதற்கு
பதிலளிநீக்குவேண்டுவோம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
அன்பின் நல்வாழ்த்துகள்..
ஸ்ரீ சரஸ்வதி அந்தாதி பாடி அம்மனை வேண்டி கொண்டேன்.
பதிலளிநீக்குஅருமையான படங்கள் மூலம் அன்னையை வணங்கி எல்லோருக்கும் எல்லா நலங்களை தர வேண்டி கொள்வோம்.
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
ஓம் சக்தி ஓம்
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
பள்ளீ நாட்களீல் படித்த சரஸ்வதி அந்தாதியைத் திரும்பவும் இப்போத் தான் படிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. மிக அருமையான பதிவு. அம்பிகையின் சிறப்பை என் போன்ற சாமானியரும் உணரும்படி எழுதி இருக்கிங்க. அம்பிகையின் அருளால் உங்கள் உடல், மன உபாதைகள் தீர்ந்து நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழப் பிரார்த்தனைகள்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி அக்கா..
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..