மகா சிவராத்திரி விழாவையொட்டி, 17/2 செவ்வாய்க் கிழமை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கிய பிரகன் நாட்டியாஞ்சலி விழா கடந்த 23/2 திங்களன்று நிறைவு பெற்றது..
தொடர்ந்து -
சென்னை மயூரி நடனாலயா, ஸ்ரீதேவி நடனாலயா, பெங்களூரு நடன கலா கிராமம், தானே நித்திய கலா நிகிதன், சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அஞ்சனா குப்தா குழுவினர் உள்பட மொத்தம் 15 குழுவினர் தமது நடன நிகழ்ச்சிகளை புதன்கிழமை அதிகாலை வரை நிகழ்த்தினர்.
மேலும் -
பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் - ஆகியவை சார்பில் நடைபெற்ற
இந்த விழா, செவ்வாய் - அன்று மாலை மங்கல இசையுடன் தொடங்கியது.
இந்த விழா, செவ்வாய் - அன்று மாலை மங்கல இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து -
சென்னை மயூரி நடனாலயா, ஸ்ரீதேவி நடனாலயா, பெங்களூரு நடன கலா கிராமம், தானே நித்திய கலா நிகிதன், சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அஞ்சனா குப்தா குழுவினர் உள்பட மொத்தம் 15 குழுவினர் தமது நடன நிகழ்ச்சிகளை புதன்கிழமை அதிகாலை வரை நிகழ்த்தினர்.
அதன் பின் - இந்த விழா தொடர்ந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நாள்தோறும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
பிரஜன் நாட்டியாஞ்சலியில் அறுநூற்றுக்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வுகளில் கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி, ஷத்ரியா - ஆகிய நடனங்கள் இடம்பெற்றன.
நிகழ்வுகளில் கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி, ஷத்ரியா - ஆகிய நடனங்கள் இடம்பெற்றன.
18/2 புதன்
19/8 வியாழன்
21/2 வெள்ளி
ஏழு நாட்கள் நடைபெற்ற பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் -
தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவ - மாணவியர் - நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, குவாஹாத்தி, புவனேஸ்வர் - என நாட்டின் பிறபகுதிகளிலிருந்தும்,
மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா - என கடல் கடந்த நாடுகளிலிருந்தும்
- புகழ் பெற்ற நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர்.
அழகிய படங்களை FB-ல் வழங்கிய -
அன்பின் குணா அமுதன் அவர்களுக்கும்
அன்பின் H. முகம்மது ஜாவீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!..
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை
தில்லையுள் கூத்தனை தென்பாண்டி நாட்டானை
தென்னாடுடைய சிவனை
எந்நாட்டவர்க்கும் இறைவனை
பாட்டும் பரதமுமாகப் பரவித் தொழுது
கண் களிக்கச் செய்த அனைவரும்
நல்லருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!..
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே!.. (4/23)
-: அப்பர் பெருமான் :-
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *