நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 09, 2025

சும்மா

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை

சும்மா இரு சொல் அற!..

- என்பது,
முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு  அளித்த உபதேசம்...

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான் 
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.. (12)

என்று கந்தர் அனுபூதியிலும் சொல்லப்படுகின்றது..

ஆக,
" சும்மா " என்கிற வார்த்தை முருகப் பெருமான் பேசிய வார்த்தை..

காலங்களைக் கடந்தும் இந்த வார்த்தையின் அழகு மிளிர்கின்றது...

Fb ல் வந்த பகுதி

சும்மா படித்துத் தான் பாருங்களேன்..

பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி
 பயன்படுத்துகின்ற வார்த்தை - சும்மா..

சும்மா என்றால் என்ன?..

பேச்சு வழக்கு சொல்லாக இது இருந்தாலும், தமிழ் மொழியின் உள்ளே வாங்கப் பட்டிருக்கின்ற வார்த்தை தான்  - சும்மா!..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் பதினைந்து அர்த்தங்கள் உள்ளன.

வேற்று மொழிகளில் இல்லாத சிறப்பு நாம் அடிக்கடி கூறுகின்ற சும்மா எனும் வார்த்தை ..

1. கொஞ்ச நேரம் சும்மா இரு
( அமைதியாக /Quite)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறி விட்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது
 (அருமை/in fact)

4.இதெல்லாம் சும்மா கிடைச்சது ன்னு
 நினச்சியா?..
 (இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?..
 (பொய்/Lie)

6. சும்மா தான் கெடக்குது.  வேணும்னா நீ எடுத்துக்கோ.. 
(உபயோகமற்று/Without use)

7. சும்மா சும்மா தொல்லை கொடுக்கிறான். (அடிக்கடி/Very often)

8. இப்படித்தான்.. சும்மா பேசிக்கிட்டே இருப்பான்
 (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா வந்தேன்..
(தற்செயலாக/Just)

10. இந்தப் பெட்டியில் எதுவும் இல்லை சும்மா தான் இருக்கின்றது..
(காலி/Empty)

11. சும்மா சொன்னதையே  சொல்லாதே..
(மறுபடியும்/Repeat)

12. பிள்ளைகளிருக்கிற வீட்டுக்கு சும்மா போகக் கூடாது.. (வெறுங் கையோடு/Bare)

13. வேலை இல்லாம சும்மா தான் இருக்கின்றோம்..
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன்  இப்படித் தான் சும்மா ஏதாவது உளறுவான்..
(வெட்டியாக/idle)

15.எல்லாமே  சும்மா தான் சொன்னேன்..
(விளையாட்டிற்கு/ Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல் நாம்  பயன் படுத்துகின்ற இடத்தின் படியும்,   தொடர்கின்ற சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்பது சும்மா இல்லை ஆச்சர்யம்

அமுதே தமிழே நீ வாழ்க!..

( Fb ல் கிடைத்ததை என்னளவில் சீர் செய்திருக்கின்றேன்)

ஓம் நம சிவாய
**

வெள்ளி, நவம்பர் 07, 2025

அன்னாபிஷேகம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை

இன்று
அன்னாபிஷேக தரிசனம்


தஞ்சை பெரிய கோயில்






கங்கை கொண்ட சோழீச்சரம்


கும்பகோணம் மகாமகக் குளக்கரை சிவ சந்நிதிகளில் 










தஞ்சையம்பதி

சிங்கப்பூர்


 
நன்றி
மனோகரன், சிவனடியார் திருக்கூட்டம் & Fb


அன்னலிங்கம் போற்றி
அமிர்தலிங்கம் போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், நவம்பர் 05, 2025

ஸ்ரீ பஞ்சாட்சரம்

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை

இன்று பௌர்ணமி
அன்னாபிஷேக நாள்


ஸ்ரீ பஞ்சாட்சர பஞ்சகம்

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ருந்த
சூர்யாய தக்ஷத் வர நாஸகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய  
தஸ்மை ' சி காராய ' நம சிவாய...

வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய
முநீந்திர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க  வைஷ்வாநர லோச்சனாய
தஸ்மை ' வ காராய ' நம சிவாய...

யக்ஷஸ் வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய  தேவாய திகம்பராய
தஸ்மை ' ய காராய ' நம சிவாய..

பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்
ய: படேத் சிவ சந்நிதௌ
சிவலோகம் அவாப்னோதி 
சிவேன ஸஹ மோததே
-:-


2013 ன் மீள்பதிவு

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், நவம்பர் 04, 2025

தரிசனம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை

திருவள்ளூர் அருகேயுள்ள தொட்டிக்கலை என்ற ஊரில்  வாழ்ந்த சுப்ரமணிய தம்பிரான் ஸ்வாமிகள் இயற்றிய நூல் சுப்ரமணியர் திருவிருத்தம்..

தம்பிரான் ஸ்வாமிகள்
முருகப்பெருமானைப் போற்றி திருவிருத்தம் பாடி, தொழுநோயாளி ஒருவரது நோய் தீர்த்துடன் தம் வாழ்வில் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியவர் என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன..
காலம் 180 ஆண்டுகளுக்கு முன்..

அத்தகைய விருத்தத்தில் இருந்து சில திருப்பாடல்கள்..

ஜோதி தொலைக் காட்சியில்  பாடலைக் கேட்டு மயங்கி தேடி எடுத்து தந்திருக்கின்றேன்..


பாடியிருப்பவர் 
திரு. மகேந்திரன் பாலகிருஷ்ணன்

இசை 
திரு. நளன் சக்ரவர்த்தி


மாமேவு நவரத்ந கேயூர மணிமகுட
மன்னிப் பொலிந்த முடியும்
வச்சிர நுதற்றிலக வெண்ணீறும் ஓராறு
வதனவிம் பத்தி னழகும்
பாமேவுபத்தற்கு மடைதிறந் தன்பொழுகு
பன்னிருவி ழிக்கருணையும்
பகரறிய பழமறை பழுத்தொழுகு சிறுநகைப்
பவளஞ்சி றந்தவாயும்
காமேவு கரகமலபந்தியுஞ் சேவலுங்
கனகமயிலுங் கிண்கிணிக்
காலுமுந் நூலும்வடி வேலுமென் மேலுமெக்
காலுந்துலங்க வருவாய்
தாமோதராநந்த கோவிந்த வைகுந்த
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (1)

கண்கொண்ட பூச்சக்கர வாளகோளத்தை யொரு
கதிகொண் டெழுந்துசுற்றிக்
ககனகூடந் தடவியுக சண்டமாருதக்
காலொடு சுழன்றுபின்னி
விண்கொண்ட மேகபடலத்தைச் சினந்துதன்
மெய்யன்ப னெனவுகந்து
விட அரவின் மகுடமொடு சடசடென வுதறிநடு
மேருவொடு பாய்ந்துகொத்தித்
திண்கொண்ட வல்லசுரர் நெஞ்சுபறை கொட்டத்
திடுக்கிட விடுத்து மோதிச்
சிறைகொண் டடித்தமரர் சிறைகொண்ட ணைத்திலகு
திறைகொண்ட மயில்வாகனா
தண்கொண்ட நீபமலர்மாலையணி மார்பனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (2)

துன்னு கயிலாசகிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலைமலைவான்
சோலைமலை மேவிய விராலிமலை மன்னிய
சுவாமிமலையுஞ் சிறந்த
சென்னிமலை வேளூர்கடம்பவன மேலவயல்
திருவருணையின் கோபுரம்
திருவாவினன்குடி பரங்கிரி திருத்தணி
சிவாசலந் திருவேரகம்
இந்நில மதிக்குந் திருச்செந்தின் முதலான
எண்ணப்படாதகோடி
எத்தலமு நீகருணை வைத்துவிளை யாடல்வித
மெத்தனையெனச் சொல்லுவேன்
தன்னைநிக ரொவ்வாத பன்னிருகை வேலனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (3)..
-:  சுப்ரமணிய தம்பிரான் :-


  விருத்தம் முழுதும் கேட்பதற்கான இணைப்பு :

  
 நன்றி இணையம்

முருகா முருகா
ஓம் நம சிவாய ஓம்
**

சனி, நவம்பர் 01, 2025

இமயம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை


பெருந்தலைவர் அவர்களை பல்வேறு திரைப்படப் பாடல்களில் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கவியரசர் .. 
அந்த வகையில் இது தனிப்பாடல் போல் இருக்கின்றது.. 

ஏழையெனப் பிறந்தவன் தான்
பாண்டி நாட்டிலே  - அவன்
ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான் 
பிறந்த நாட்டிலே..

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே - அவன்
அறிஞன் என  உயர்ந்து நின்றான் 
இமயம் வரையிலே...

இது தான் முழு வடிவமா என்பது தெரியவில்லை..

 நன்றி
எங்கள் சமுதாயப் பேரவை
Fb

 நல்லோர் புகழ் வாழ்க
**

வெள்ளி, அக்டோபர் 31, 2025

மணியே

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை


மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24
-: அபிராமி பட்டர் :-


உணர்ச்சி மயமான

காணொளிக்கு நன்றி


பாடலின் வரிகள் தெரியும்.. 
எனினும்
 நன்றி: ஸ்ரீராம்..

பாடல் கவியரசர்
இசை K.V. மகாதேவன்

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ

பதில் சொல்லடி அபிராமி..

நில்லடி முன்னாலே முழு
நிலவினைக் காட்டு 
உன் கண்ணாலே 
சொல்லடி அபிராமி..

பல்லுயிரும் படை த்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ

நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 

இந்த சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ..

சொல்லடி அபிராமி..

வாராயோ 
ஒரு பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ..

வானம் இடிபடவும்
பூமி பொடி படவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே 

கொடிகள் ஆட 
முடிகள் ஆட குடிபடை 
எழுந்தாட வரும் கலை அழகே

பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர
மத்தளமும் சத்தமிட
வாராயோ ஒரு
பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ

செங்கயல் வண்டு
கலின் கலின் என்று 
ஜெயம் ஜெயம் என்றாட 
இடை சங்கதம் என்று 
சிலம்பு புலம்பொடு 
தண்டை கலந்தாட 

இரு கொங்கை கொடும் பகை வென்றனம் 
என்று குழைந்து குழைந்தாட

மலர் பங்கயமே 
உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட 
விரைந்து வாராயோ 
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி 
கண்களில் தெரிகின்றாள் 
கண்கள் சிவந்திடும் வண்ணம் 
எழுந்தொரு காட்சியும் தருகின்றாள்

வாழிய மகன் இவன் வாழிய 
என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் 

ஓம் சக்தி ஓம்
**

புதன், அக்டோபர் 29, 2025

சின்னஞ்சிறு

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை


இன்று 
இயல்பான இனிதான பாடல் ஒன்று

சின்னஞ்சிறு பெண் போலே 
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே  
ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் 
(சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி 
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் 
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு 
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக 
நர்த்தனம் ஆடிடுவாள்.. 
(சின்னஞ்சிறு)
 -::-

பாடல்
சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர
 உளுந்தூர்பேட்டை சண்முகம்

இசை: T.R. பாப்பா 


 நன்றி இணையம்
-:-

ஓம் சக்தி ஓம்
**

செவ்வாய், அக்டோபர் 28, 2025

சஷ்டி 7

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை


பொதுவாக சிவாலயங்களின் திருவிழா மரபுகள் எப்படி இருப்பினும் கந்த சஷ்டிக்கு அடுத்த நாள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது..

அந்த வகையில் இன்றைய
திருப்புகழ்..

இப்பாடலின் தொடக்கத்தில் தேவகுஞ்சரியும் நிறைவில் வள்ளி நாயகியும் குறிப்பிடப்படுகின்றனர்..


திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள் காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள் காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள் காண்

மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள் காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள் காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள் காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள் காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி
கௌமாரம்

நாளும் ஒலிப்பேழையில் 
கேட்டு மகிழ்கின்ற பாடல் இது.


ஓம் சிவ சுப்ரமண்யாய
**

திங்கள், அக்டோபர் 27, 2025

சஷ்டி 6

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
திங்கட்கிழமை

இன்று
கந்தசஷ்டி

ஸ்ரீ முருகப்பெருமான்
தஞ்சை பெரிய கோயில

மதிகெட் டறவாடி மயங்கி அறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.. 50

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
கந்தரனுபூதி
நன்றி கௌமாரம் 


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதஸாமீ நமோநம ...
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...
 வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய 
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... 
 பெருமாளே..


வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்

வெங்கழு குடன்கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே

ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்

அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை  அருந்திப் புரந்த வைவேல்..

தாதார் மலர்ச் சுனை பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்றே ரகம்

தணிகை செந்தூர் இடைக் 
கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்

போதார் பொழிற் கதிர் காமத் தலத்தினைப் புகழும்  அவரவர் நாவினிற்

புந்தியில மர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
*

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க  வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க  செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-

அனைவருக்கும் நன்றி

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

ஞாயிறு, அக்டோபர் 26, 2025

சஷ்டி 5

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.. 38

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
 கந்தரனுபூதி
 நன்றி கௌமாரம்


சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும் 
நற்கோழிக் கொடியும் அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் 
என் கண்ணுற்றதே..
-: திரு அருட்பா :-

ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள் தமது நித்ய வழிபாட்டின் போது தணிகாசலத் திருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் தரிசித்தார்..

அச்சமயம் பாடிய பாடல்களில் ஒன்று..

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

சனி, அக்டோபர் 25, 2025

சஷ்டி 4


      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
சஷ்டி நான்காம்  நாள்


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.. 34

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே..  36
கந்தரனுபூதி


பாதி மதிநதி போது மணிசடை
     நாதர் அருளிய ... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ... மணவாளா

காதும் ஒருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு .... மருகோனே

காலன் எனையணு காமல் உனதிரு
     காலில் வழிபட ... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ... சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
     சூழ வரவரும் ... இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனில் ... உறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
 நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வெள்ளி, அக்டோபர் 24, 2025

சஷ்டி 3

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே. 22

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
கந்தரனுபூதி


வசனமிக வேற்றி ... மறவாதே
     மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
     இகபரசெள பாக்ய ... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**