நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 4
குறளமுதம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.. 4
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 4
**
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 4
**
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக் காப்பு
திரு சாய்க்காடு
(சாயாவனம்)
நீநாளும் நன்னெஞ்சே
நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்
சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப்
புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே. 3
நன்றி
பன்னிரு திருமுறை
இன்று
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..