நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 5
குறளமுதம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.. 5
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 5
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 5
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக் காப்பு
திருவலிவலம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**



வடமதுரை மைந்தன் மாயன் யமுனைத் துறைவன் ஆயர்குல அணிவிளக்கு தாமோதரனைப் பாடித் துதிப்போம்.
பதிலளிநீக்குமார்கழி ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
மார்கழி ஆண்டாள் மாதத்தில் மாயவனை துதித்து வணங்கி நிற்போம்.
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணா ..
ஓம் சிவாயநமக.
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா