தமிழமுதம்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.. (154)
***
அருளமுதம்
ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 07
கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்
ஓம் ஹரி ஓம்
* * *
சிவ தரிசனம்
திருக்குடமூக்கு - கும்பகோணம்
திருக்குடமூக்கு - கும்பகோணம்
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளுமாறு அதுகேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *
தேவி தரிசனம்
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும்பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெலா, நின்னருட் புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே!..(027)
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *
"குயில் பாடும் கும்பகோணம் கும்பகோணம் கோவில் கண்டேன்... கும்பேஸ்வரப்பெருமானின் வடிவம் கண்டேன்... அமுதக்குடம் உடைந்ததினால் அமைந்த லிங்கம்..."
பதிலளிநீக்குடி எம் எஸ் பாடல் நினைவுக்கு வருகிறது!
https://www.youtube.com/watch?v=JF38gngNY7E
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்களுக்கு நல்வரவு...
1980 களில் வந்த இசைத் தொகுப்பு அது... என்னிடம் இருக்கிறது ஒலிநாடாவாக....
மகிழ்ச்சி.. நன்றி...
பக்தி அமுதம் ரசித்தேன், ருசித்தேன்.
பதிலளிநீக்குஅருமையான பக்தி அமுதம். திகட்டாத அமுதம். பட்டீஸ்வரம் துர்கை மனதிலேயே நிற்கிறாள். எப்போவோ பத்து வருஷங்கள் முன்னர் போனது! கும்பேஸ்வரர் கோயிலும் போய்ப் பல வருடங்கள்!
பதிலளிநீக்குதிகட்டா அமுதம்.
பதிலளிநீக்குபாடல்களும், படங்களும் அருமை.
அதிகாலைத் தமிழ் அமுதம் மனதுக்கு விளக்கம்.
பதிலளிநீக்குஇனிமை கொடுக்க வந்த மார்கழிக்கு
இயைந்த வணக்கம்.
பக்தி பெருக இங்கே பதியப் பட்ட
பாடல்கள்
என்றும் ஊட்டும் நன்மை.நன்றி மா.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...
நீக்குமார்கழி ஏழாம்நாள் தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி...
அருமை ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி...
அருமை. பாடல் வரிகள் அற்புதம்.
பதிலளிநீக்குகாசும் பிறப்பும் கைகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியார் மத்தினால் ஓசை படுத் தயிர் அரவம் கேட்டிலையோ.
மிக்க நன்றி
தங்களுக்கு நல்வரவு...
நீக்குஅன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி..