நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 07, 2022

வரவேண்டும்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வரவேண்டும் 
வரவேண்டும் தாயே - 
ஒரு வரம்
தர வேண்டும் 
தர வேண்டும் நீயே..
(வரவேண்டும்)

அறம் வளர்க்கும் அம்மா 
பர்வத வர்த்தனி
ஐயாறு தனில் மேவும் 
தர்மசம் வர்த்தனி - திரு 
வையாறு 
தனில் மேவும் தர்மசம் 
வர்த்தனி 
(வரவேண்டும்)

தான் எனும் அகந்தை 
தலைக்கு ஏறாது
தாழ்ந்த நிலையிலும் 
தர்மம் மாறாது
வான்புகழ் வள்ளுவன் 
வகுத்த நல் வழியினில்
வையகம் வாழ்ந்திட 
வரமருள் தாயே 
(வரவேண்டும்)
*

இயற்றியவர்
ஸ்ரீ மா. வரதராஜன்
பாடியவர்கள் தேரழுந்தூர் சகோதரிகள்
இசையமைத்தவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடலின் ஆண்டு : 1972

நன்றி
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
படங்கள் : திருவையாறு சிவகணங்கள்..
காணொளித் தொகுப்பு தஞ்சையம்பதி


அறம் 
வளர்த்த நாயகியே 
போற்றி போற்றி..

ஓம் சக்தி ஓம்
***

21 கருத்துகள்:

  1. நன்றி.  அன்னை அகிலத்தைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அருமை. திரு மா.வரதராஜன் குறித்து அறிந்திருந்தாலும் ஶ்ரீராம் மூலமே மேல் அதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கே பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. இந்தப் பாடலைப் பலமுறைகள் கேட்டிருந்தாலும் அதன் விபரங்கள் இன்றே அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஸ்ரீராம் அவர்கள் கொடுத்தது தான்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. பாடலும் படத்தொகுப்பும் அருமை.
    மீண்டும் பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பல முறை கேட்டு மகிழ்ந்த இந்த பாடலும் அருமை. இங்கும் கேட்டு மகிழ்ந்தேன். காணொளி தொகுப்பும் நன்றாக உள்ளது. அன்னை அனைவரையும் அன்புடன் தன் கடைக்கண் பார்வையால் காக்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அன்னை அனைவரையும் அன்புடன் தன் கடைக்கண் பார்வையால் காக்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன்..//

      நானும் அவ்விதமே வேண்டிக் கொள்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான கேட்டு ரசித்த பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. பாடல் நன்று. பதிவாக்கியதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நீக்கு
  8. பாடல் அருமையான பாடல். கேட்டு ரசித்த பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  9. நிறைய கேட்டு ரசித்த பாடல். இப்போது மீண்டும் கேட்டு ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. பல தடவை கேட்டிருக்கிறேன். நல்லதோர் பாடல் பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..