நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 18, 2022

ஸ்ரீரங்கநாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புரட்டாசி 
முதல் நாள்

வைணவர்கட்கு மட்டுமின்றி 
அனைவருக்கும்  உகந்த மாதம்..

திரு அரங்கனைத் துதித்தவாறு 
இம்மாதத்தினை
வரவேற்போம்..

இன்றைய பதிவில் 
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் 
அருளிச் செய்த திருமாலையில் 
இருந்து சில திருப்பாடல்கள்..
( நன்றி: ஸ்ரீரங்க ரங்கம்)


பச்சை மாமலைபோல் மேனி 
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!.. (873)

விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே.. (888)

கங்கையிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.. (894)


போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றி னேனே.. (897)

ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னே என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைக ணம்மா
அரங்கமா நகரு ளானே..(900)


மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே
பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய்
என்னையா ளுடைய கோவே.. (901)
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

 காணொளி தொகுப்பு
தஞ்சையம்பதி


ஓம் ஹரி ஓம்
***

18 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இனிய புரட்டாசி மாதம் பரந்தாமனின் அருளால் அனைவரின் வாழ்விலும் நலம் சேர்க்கட்டும். ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்துக் கொண்டேன். படங்கள், ஸ்ரீ தொண்டரடி பொடியாழ்வாரின் திருப்பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காணொளி தொகுப்பும் அருமையாக உள்ளது. பெருமாளை கண் நிறைய கண்டு பக்தியுடன் சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பெருமாளை கண் நிறைய கண்டு பக்தியுடன் சேவித்துக் கொண்டேன்.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. பாசுரங்களும் அருமை. காணொளி பாடலும் உங்கள் படத் தொகுப்பும் அருமை. முதல் படம் மிக அருமை.
    ஓம் நமோ நாராயாணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஓம் நமோ நாராயணாய..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. காணொளி சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  4. நம்பெருமாளின் தரிசனம் சிறப்பு. பிரபந்தப் பாடல்களும் அருமை. காணொளியைப் பார்க்கணும். படங்களை அருமையாய்த் தொகுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமோ நாராயணாய..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. காணொளி சிறப்பு. உணர்வு பூர்வமான குரலில் டிஎம் எஸ் பாடி இருப்பதற்கும் ஈடு, இணை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது திரைப் பட பாடல்களின் வழியாக பக்தியையும் வளர்த்த காலம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  6. தவத்துளார் தம்மில் அல்லேன்
    தனம்படைத் தாரினல்லேன்
    உவத்த நீர் போல எந்தன்
    உற்றவர்க்கு ஒன்றுமல்லேன்
    துவர்த்தசெவ் வாயினார்க்குத்
    துவக்கறத் துரிசனானேன்
    அவத்தமே பிறவி தந்தாய்
    அரங்கமா நகருளானே

    897 கடைசி வரி, என் செய்வான் தோன்றினேனே
    901ல் இரண்டாவது வரி... வாயிலோர் இன்சொல் இல்லை

    பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  7. பதிவும் பாடலும் அருமை...பாடல் எத்தனையோ முறை கேட்டதுண்டு மீண்டும் கேட்டு ரசித்தேன், துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடல் மீண்டும் நினைவூட்டிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..