நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆவணி 31
வெள்ளிக்கிழமை
சஷ்டியும் (மு.ப 3:07 வரை)
கார்த்திகையும் (ம 1:21வரை)
இன்றைய பதிவில்
வழக்கம் போல
திருப்புகழ் பாடல்..
இதைப் பாடியிருப்பவர்
பெங்களூர் A.R.ரமணியம்மாள்..
கந்தர் அலங்காரத்துடன்
ஆரம்பித்து திருப்புகழைத் தொடர்ந்து
இனியதொரு பஜனைப் பாடலுடன்
நிறைவு செய்திருக்கின்றார்..
மெய் மறக்கச் செய்யும்
திருப்பாடல்களுடன்
தரிசனம் கண்டு மகிழுங்கள்..
மாலோன் மருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்
சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்திலனே
அந்த நான்முகனே..(90)
-: கந்தரலங்காரம் :-
திருமாலின் திரு மருகனாகவும் கனகசபையில் திரு நடனம் புரியும் ஈசன் எம்பெருமானின் தவப் புதல்வனாகவும், தேவர்களுக்கும் உயர்வான தேவ தேவனாகவும்,
மெய்யறிவின் வடிவினனாகவும் விளங்குகின்ற முருகப்பெருமான் இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும் சூழ்ந்து விளங்கும் திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கின்றான்..
திருச்செங்கோட்டிற்குச் சென்று, பெருமானைக் கண்ணாரக் கண்டு வணங்கும்படி நாலாயிரம் கண்களை அடியேனுக்குப் படைக்க வில்லையே - நான்முகப் பிரம்ம தேவன்!..
திருப்புகழ்
தலம்
திருப்பரங்குன்றம்
தந்தனந் தந்தத் ... தனதான
தந்தனந் தந்தத் ... தனதான
சந்ததம் பந்தத் ... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ... திரியாதே
கந்தனென் றென்றுற் ... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ... பெருமாளே.
(நன்றி : கௌமாரம்)
பந்தபாசம் என்னும் தொடர்பினாலே
துயரம் கொண்டு சோர்வடைந்து திரியாமல்,
உனைச் சரணடைந்து கந்தன் எனத் தினமும்
உள்ளத்தால் உணர்ந்து யான் அன்பு கொள்வேனோ?..
(அந்த பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?..)
ஐராவதம் எனும் தேவலோக யானையால் வளர்க்கப்பட்ட தேவகுஞ்சரி எனும் பூங்கொடியை மணம் செய்து கொண்டு மகிழ்பவனே..
சங்கரனின் ஒரு பாகமாக விளங்குகின்ற
சங்கரிக்கு மகவாய் உதித்த ஷண்முகனே,
செந்தூரிலும், கண்டி எனும் பதியிலும் ஒளி மிகுந்த வேலுடன் விளங்குபவனே,
அழகிய திருப்பரங்குன்றத்தினில் மணக்கோலத்தில்
அமர்ந்திருக்கும் பெருமாளே..
***
காணொளி
வடிவமைப்பு
தஞ்சையம்பதி
கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்!..
***
திருப்புகழ் சந்ததம் பந்தத் தொடராலே என்னிடம் கே ஜே யேசுதாஸ் பாடி கேஸட்டில் இருந்தது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம் ..
நீக்குசரணமடைந்திட்டேன் கந்தனையே தக்கணமே நீ வருவாய்...!
பதிலளிநீக்குநிச்சயம் கந்தன் வந்தருள்வான்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்...
காணொளியை ரசித்தேன். அண்மையில் திருச்செந்தூர் சென்றுவந்தோம்.
பதிலளிநீக்குவெகுநாட்களுக்குப் பின் வந்திருக்கின்றீர்கள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..
காணொளிப்பாடல் கேட்டேன் அருமை ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்குஅருமை ஐயா... காணொளி சிறப்பு...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. முருகனைத் தொழும் இனிய பாடல்கள், மேலும் அவனது அழகிய படங்களுடன் பாடலின் விளக்கங்களுடன் பதிவு மன நிறைவை தருகிறது. பெங்களூர் திருமதி ரமணியம்மாள் அவர்களின் இனிய கம்பீரமான திருப்புகழ் பாடல் காதுகளுக்கு இனிமை. காணொளியும் சிறப்பு. அனைத்தும் இன்றைய வெள்ளியில் தொகுத்துத் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
முருகா சரணம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அழகிய படங்களுடன் பாடலின் விளக்கங்களுடன் பதிவு மன நிறைவை தருகிறது.//
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
திருப்புகழ் பாடல் பகிர்வும், விளக்கும் அருமை.
பதிலளிநீக்குதிருமதி ரமணியம்மாள் பாடலும் அதற்கு நீங்கள் வடிவமைத்த காணொளி படங்களும் அருமை.
நேற்று மாலை நடந்த கூட்டு வழிப்பாட்டில் சந்ததம் பந்த தொடராலே , என்ற தென்பரங்க் குன்றம் பாடலும், பழமுதிர் சோலை பாடல் அகரமுமாகி பாடலும் பாடினோம்.
// நேற்று மாலை நடந்த கூட்டு வழிபாட்டில் சந்ததம் பந்த தொடராலே , என்ற தென்பரங் குன்றம் பாடலும், பழமுதிர் சோலை பாடல் அகரமுமாகி பாடலும் பாடினோம்.//
நீக்குமிகவும் மகிழ்ச்சி..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
வாழ்க நலம்..
அருமையான திருப்புகழ் மெட்டு....ரசித்துக் கேட்டேன்.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
நீக்குதிருப்புகழ் பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குதிருமதி ரமணி அம்மாள் பாடல் எங்கள் அப்பாவிடம் இருந்தது.