நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 08, 2023

திருவிண்ணகர் 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
சனிக்கிழமை

திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் 
திருக்கோயிலில் பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்து 
நிகழும் ஆனி 10 ஞாயிறன்று (25/6) காலை யாகசாலை பூஜைகள் ஸ்ரீ சுதர்சன ஹோமத்துடன் தொடங்கி 
ஆனி 14  வியாழன்று (29/6) மகா சம்ப்ரோக்ஷணம் 
சிறப்புடன் நடைபெற்றது..


மார்க்கண்டேயருடைய தவத்திற்காக ஸ்ரீ பூமா தேவி துளசி வனத்தில் அவதரித்து மார்க்கண்டேயருக்கு
மகளாக வளர்ந்த திருத்தலம்..

ஸ்ரீ பூமிதேவியை மகளாகப் பெற்ற மார்க்கண்டேயர்
மகாவிஷ்ணுவிற்கு கன்னிகாதானம் செய்து வைத்த தலம்.. 
திருவிண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோயில்..

நில மாமகளை மணக்க விரும்பிய மகாவிஷ்ணு  மார்க்கண்டேயரிடம்  வந்து பெண் கேட்ட போது  - " எனது பெண் மிகவும் சிறியவள். அவளுக்கு சரியாக சமைக்கக் கூடத் தெரியாது.. " - என்று மார்க்கண்டேயர்
சொல்லவும் -

அதற்குப் பெருமாள், 
" தங்களது மகள்  உப்பில்லாமல் சமைத்தாலும் அதனை அன்புடன் ஏற்றுக் கொள்வேன்.. " என்று வாக்களித்ததால் - 
இக்கோயிலில் இன்றும் நைவேத்தியங்கள் உப்பு இல்லாமலே சமைக்கப் படுகின்றன..
























இத்திருக்கோயிலில் தாயாருக்கென தனி சந்நிதி இல்லை..

மூலஸ்தானத்தில் பெருமாளின் வலப்புறம் நிலமா மகளும் இடப்புறம் மார்க்கண்டேய மகரிஷியும் விளங்குகின்றனர்..

உள் பிரகாரத்தில் தென்புறம் திருப்பாவை பாசுர -  தாத்பர்யங்கள் முப்பதும் அழகோவியங்களாகத் திகழ்கின்றன..

கடந்த வியாழனன்று மாலை நேரத்துக்கு பேருந்துகள் அமையாததால் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.. 

முன்னிரவுப் பொழுதில் ஸ்ரீ ஒப்பிலியப்பன் தரிசனம்.. 

இன்றைய பதிவின்
படங்களைக் கண்டு மகிழ்வீர்கள் என, நம்புகின்றேன்.. 
மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் தொடரும்..
***
போதார் தாமரையாள் புலவிகுல வானவர்தம் 
கோதா கோதில் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த 
வேதா நின்னடைந்தேன்  திருவிண்ணகர் மேயவனே.. 1466
-: திருமங்கையாழ்வார் :-
 (நன்றி ஆழ்வார் அமுதம்)

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

7 கருத்துகள்:

  1. ஒப்பில்லாத பெருமாள் உப்பிலியப்பத்திருமால் கோவில் கும்பாபிஷேகம் தகவல் சிறப்பு.  படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. உப்பிலியப்பன் கும்பாபிஷேகப் படங்கள் அனைத்தும் அழகு. ரசித்துப் பார்த்தேன். தகவல்களும்.

    உப்பிலியப்பன் கோயில் என்றாலே இப்போதெல்லாம் நம் ஸ்ரீராமின் கல்யாணம் அங்குதான் நடந்தது என்பதும் நினைவுக்கு வந்துவிடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மாயவரத்தில் இருந்த போது அடிக்கடி சென்று தரிசனம் செய்த கோவில். மிக அருமையாக இருக்கிறது இப்போது புது பொலிவுடன்.
    ஒப்பில்லாத பெருமாள் நம் உப்பிலியப்பன் பெருமாள் என்ற சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடல் காதில் ஒலிக்கிறது.
    அருமையான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஒப்பில்லா அப்பனின் கும்பாபிஷேஹத் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. நாங்களும் சில கல்யாணங்களுக்கு அங்கே சென்றிருக்கிறோம். எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேஹம் நடந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. பட்டாசாரியார் கேட்டுக் கொண்டே இருக்கார். ஊர் ஜனங்கள் ஒத்துழைக்கணும். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. ஒப்பில்லா அப்பனின் தரிசனம் சிறப்பாக அமைந்தது. தகவல்கள் அனைத்தும் நன்று. படங்கள் வழி நாங்களும் இத்தலத்திற்கு வந்து சென்ற உணர்வு. நேரடியாக செல்ல வாய்ப்பு அமையவேண்டும் - அடுத்த தமிழகப் பயணத்திலாவது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..