நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 28
செவ்வாய்க்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்
திருப்பனந்தாள் திருப்புகழ்
தந்தா தத்தன தந்தா தத்தன
தந்தா தத்தன ... தனதான
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய ... மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா நிட்டத
நந்தா நித்தரை ... மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
நந்தா நிப்படி ... யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
என்றே யிப்படி ... அருள்வாயே..
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர் ... குடியோட
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென ... வருசூரைப்
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில ... ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
நந்தா ளுற்றருள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
மலர்க் கொத்துகள் நிறைந்த கரிய கூந்தலையும் சந்திரனைப் போன்ற முகத்தையும் சர்க்கரை போன்ற சொற்களையும் உடைய மாதர்களின்
சந்தன மணத்துடன் முத்து மாலைகள் நிறைந்து
விளங்குகின்ற கொங்கைகள் - உயரமான மலைகளைப் போல எதிரில் வந்து என் மனதை மயக்கிக் கவர்கின்ற நேரத்தில் -
இந்த ஏழையின் மனம் அவர்களின் பின்னே
அலைந்து திரிந்து கெட்டுப் போகாமல் -
இதோ சிறந்ததொரு உபதேசப் பொருள்..
பெற்றுக் கொள்.. இது மங்காத அற்புதம்.. -
என்று சொல்லி அருள்வாயாக..
சந்திரன் பயந்து ஓட அதைக் கண்டு சூரியனும் அஞ்சி ஓட வனாந்தரத்தில் வாழ்கின்ற முனிவர்களும் குடும்பத்துடன் அஞ்சி ஓடும்படியாக
அந்த மலையில் இருந்தவர்கள் எங்கே?.
இந்த மலையில் இருந்தவர்கள் எங்கே?..
என்று கேட்டவாறு
திடுக்கிடும்படியாக வந்த சூரனை -
பந்தடிப்பது போல விரட்டியடித்து -
தலை சிதறி விழும்படிச் செய்து
போரிடுவதற்கு வந்த அசுரர்களைக் கொன்று
அவர்களது உடல்களை பத்ரகாளியின் தேவதைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்த கந்தனே..
திருப்பனந்தாள் எனும் திருத்தலத்தில்
வீற்றிருக்கின்ற பெருமாளே..
(திருப்பனந்தாள் கும்பகோணத்திற்கு
அருகிலுள்ள சிவாலயம்)
**
கந்தசஷ்டியை முன்னிட்டு அருகிலுள்ள
அரசூர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயிலில் ஆறு நாட்களுக்கும் உபயதாரர்களால் ஸ்கந்த ஹோமம் பூர்ணாஹூதி சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனைகள் நடைபெற இருக்கின்றன..
நேற்று காலையில் இங்கு
ஸ்வாமி தரிசனம் செய்தேன்..
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய
சிவாய திருச்சிற்றம்பலம்
***
ஓம் முருகா.. லார்ட் முருகா லண்டன் முருகா...
பதிலளிநீக்குதங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
கந்தா போற்றி போற்றி..
திருப்புகழை ஸ்ரீ பாடி பாலதண்டாயுதபாணியை வணங்கி கொண்டேன். முருகன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி.. நன்றி..
கந்தா போற்றி போற்றி..
விஷேட அர்ச்சனைகள் நடைபெறுவது சிறப்பு.
பதிலளிநீக்குகந்தா போற்றி போற்றி.
தங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி.. நன்றி..
கந்தா போற்றி போற்றி..
எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் நல்லதையே அருள எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதிருப்பனந்தாள் திருப்புகழ் பாடலையும் உங்கள் வண்ணத்தில் உருவான பாடலையும் படித்து மகிழ்ந்தேன். நன்றி.
நான் பாடல் எதுவும் இதில் எழுத வில்லையே..
நீக்குதிருப்புகழும் அதன் விளக்கமும் தான்..
தங்களது அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி.. நன்றி..
கந்தா போற்றி
கடம்பா போற்றி..
அரசூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி துளசிதரன்..
கந்தா போற்றி
கடம்பா போற்றி..
திருப்புகழும், அதன் பொருளும் கூடவே கோயிலில் ந்டடக்கும் சிறப்பு வழிபாடுகளும் படங்களும் சிறப்பு, துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி சகோ..
கந்தா போற்றி
கடம்பா போற்றி..
திருப்பனந்தாள் திருப்புகழும் விளக்கமும் படித்துத் தெரிந்து கொண்டேன். கந்தா, கடம்பா, கார்த்திகேயா போற்றி போற்றி! அரசூர்க்கோயில் பற்றி இப்போத் தான் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி அக்கா..
கந்தா போற்றி
கடம்பா போற்றி..