நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 15, 2023

சஷ்டி 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 29 
 புதன்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்

இலஞ்சி திருப்புகழ்


தனந்தன தந்த தனந்தன தந்த 
தனந்தன தந்த ... தனதானா
 
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
துரந்தெறி கின்ற ... விழிவேலால்

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு 
சுருண்டும யங்கி .. மடவார்தோள்

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து 
மெலிந்துத ளர்ந்து ... மடியாதே

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை 
விதங்கொள்ச தங்கை ... யடிதாராய்

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற 
பொலங்கிரி யொன்றை ... யெறிவோனே

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குக ணங்கொள் 
புரந்தரன் வஞ்சி ... மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் 
குரும்பைம ணந்த ... மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று 
இலஞ்சி அமரந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கருமேகம் போல நீண்டு அடர்ந்த கூந்தலையும்  
அதில் சூடியுள்ள மலர்களில் 
மொய்க்கின்ற வண்டுகளைப் பார்த்தும்

வேகமுடைய வேல் 
போன்ற கண்களைப் பார்த்தும்

சுழன்று சுழன்று துவண்டு  துவண்டு 
மனம் மயக்கமுற்று

மாதர்களின் தோள்களை 
விரும்பி நடந்து

மெலிந்து தளர்ந்து (நான்)
மடிந்து போகாமல்

கடம்ப மலர் மாலையை விரும்பி 
அணிந்திருக்கும் முருகா..

அழகிய தண்டைகளுடன் 
இன்னிசை கூடி ஒலிக்கின்ற
கிண்கிணிகளும் விளங்கும் உனது 
திருவடிகளை எனக்குத் தந்தருள்வாயாக..

பொன் மலையாக மேன்மை கொண்டு 
நின்ற கிரெளஞ்சத்தை அழித்தவனே..

உன்னைப் புகழ்ந்து மகிழ்ந்து வணங்கி 
வழிபட்ட தேவேந்திரன் வளர்த்த
வஞ்சிக் கொடியாகிய தேவயானையின் 
கணவனே..

தினைப் புன வள்ளியின்
 குரும்பை மார்பினில் கலந்து 
மகிழ்ந்த மணி மார்பனே..

சரவணத் திருக்குளத்தில் தோன்றிய 
காரணத்தால் இலஞ்சியம் என்ற 
திருப்பெயர் கொண்டு, 
இலஞ்சி எனும் திருத்தலத்தில் 
வீற்றிருக்கும் பெருமாளே...
**
திருச்செந்தூரில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்கு சீர் வளர் சீர் தருமபுர ஆதீன மடாதிபதி அவர்களால்  
நானூறு லிட்டர் பால் காய்ச்சி வழங்கப்பெற்றது..











 நன்றி:
தம்பிரான் ஸ்வாமிகள்

முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

16 கருத்துகள்:

  1. பால் பிரசாதம் வாங்க வரிசையில் வராமல் முண்டியடிக்கும் மக்கள்!  திருந்தவே மாட்டார்கள்.  நமக்குள்ளேயே ஒரு ஒழுங்கு எப்போதுதான் கைவருமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நமக்குள்ளேயே ஒரு ஒழுங்கு எப்போது தான் கைவருமோ..///

      இங்கே ஒழுங்கைப் பின்பற்றினால் பெருந்தவறு.. பிறரால் கண்டிக்கப்படுவோம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கூடிய அத்தனை பக்தகோடிகளுக்கு 400 லிட்டர் பால் போதுமானதாக இருந்ததா?  ஏனெனில் ஆதீனம் அவர்கள் பெரிய அளவுக்குடுவையில் பால் எடுத்து அவரவர் நீட்டும் ரகவாரியான பாத்திரங்களில் ஊற்றுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஷ்டி விரதம் இருக்கின்ற அன்பர்களுக்கு - என்று தகவல்..

      திருச்செந்தூருக்கு வந்திருக்கின்ற எல்லாரும் அண்டாவை கொண்டு வந்து நீட்டினால் என்ன செய்ய?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. இலஞ்சி பெருமாளே சரணம்.

    திருச் செந்தூர் பக்தர்களுக்கு ஆதீனம் பால் ஊற்றியது நல்ல செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  4. திருப்புகழை பாடி இலஞ்சி முருகனை வணங்கி கொண்டேன். ஸ்ல வருடம் முன்பு இலஞ்சி குமரனை தரிசனம் செய்து வந்தது நினைவுகளில் வந்து போனது.

    விரதம் இருப்பவர்களுக்கு மட்டும் என்று சொன்னாலும் மக்கள் எல்லோரும் பாலை பெற விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இலவசமாகக் கிடைப்பதை எவரும் விடுவதில்லை..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  5. எல்லோரையும் வரிசையில் வரச் சொல்லிட்டுப் பாலைக் கொடுக்கலாம். ஆனால் மக்கள் அதுக்கு ஒத்து வரணுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் அதுக்கு ஒத்து வரணுமே!..

      அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டார்கள்..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  6. தங்குமிடங்களை எல்லாம் தகரக்கொட்டாய்களாக மாற்றி பக்தர்களை இந்த மழைக்காலத்தில் சிரமத்துக்கு உள்ளாக்குவதாகக் கேள்வி. :( எல்லாம் அவன் செயல்! நாம் என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத் தான் முன்பொரு பதிவில் சொல்லியிருந்தேன்..

      நீக்கு
  7. ஏன் இப்படி முண்டியடித்துக் கூட்டம்? இதற்கு கயிறு கட்டி அதற்குள் வரிசையாக வரச் சொல்லலாம் கோயில் தரிசனத்திற்குக் கம்பிகள் கயிறுகள் கட்டு வது போல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் வேலைக்கு ஆகாது..

      பக்தர் என்றாலும் ஒழுங்கமைப்பில் வருவதில்லை..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின்
      வருகைக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      முருகா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..