நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல்
வேந்தனை செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.. 72
திருத்தலம் - குன்றுதோறாடல்
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடென
வகுக்கப்பட்ட சோலைமலையானது குன்றுதோறாடல்
என்று சிறப்பிக்கப்படுவது வழக்கம்..
அதிருங் கழல்ப ணிந்து - அடியேனுன்
அபயம் புகுவ தென்று - நிலைகாண
இதயந் தனிலி ருந்து - க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க - அருள்வாயே..
எதிரங் கொருவ ரின்றி - நடமாடும்
இறைவன் தனது பங்கில் - உமைபாலா
பதியெங் கிலுமி ருந்து - விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த - பெருமாளே..
அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி - அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி - வருவோனே
இருநிலமீதில் எளியனும் வாழஎனது முனோடி - வரவேணும்..
மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர் காமம் - உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியெனெ ஆடும் - மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு பெருமாளே..
கந்தனுக்கு வேல்.. வேல்..
முருகனுக்கு வேல்.. வேல்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
முருகா சரணம். முத்துக்குமரா சரணம்.
பதிலளிநீக்குகந்தனுக்கு வேல்.. வேல்..
பதிலளிநீக்குமுருகனுக்கு வேல்.. வேல்!..
பழமுதிர் சோலை முருகனை காணும் நாள் எப்போது வரும் என்று வேண்டிக் கொண்டு இருந்தேன், வந்து விட்டார் உங்கள் பதிவில்.
பதிலளிநீக்குதரிசனம் செய்து கொண்டேன். திருப்புகழை பாடி வேண்டிக் கொண்டேன்
சோலைமலை முருகனே சரணம்...
பதிலளிநீக்குமனதிற்கு நிறைவு தருகின்ற அடிகள்.
பதிலளிநீக்குசோலைமலை முருகன் திருவடி தொழுவோம்.
பதிலளிநீக்குசோலைமலை அழகோ அழகு. நான் முதல் முதல் பார்த்தப்போ உண்மையாகவே சோலைமலைதான். கல்யாணம் ஆகித் தான் கணவரோடு அழகரையும், சோலைமலை முருகனையும் முதல் முதலாக தரிசனம். அப்போ இருந்ததையும் இப்போ இருப்பதையும் நினைத்தால் மனது வேதனை அடைகிறது. ஆனாலும் சோலைமலை முருகனுக்கு அரோஹரா! முருகனைப் பார்க்க மனம் நிறைவடையும். இங்கே கொடுத்த தரிசனத்துக்கு நன்றி. அதன்பின்னர் பலமுறை பார்த்தாச்சு. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் போகவும் ஆசை.
பதிலளிநீக்கு