நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...
***
இன்றைய பதிவில்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்!..
ஸ்ரீராஜராஜேஸ்வரி என விளங்கும் பராசக்தி அம்பிகையைப் பற்றிய
எட்டு ஸ்லோகங்கள்.. அத்தனையும் அற்புதமானவை...
சர்வ வல்லமையுடன் எங்கும் நிறைந்திருப்பவளாகிய
அம்பிகையைத் துதிக்கும் இந்த அஷ்டகத்தில்
அவளது திருப்பெயர்களே பயின்று வருகின்றன.
அவையனைத்தும்
ஆயுளையும் ஆரோக்யத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும்
சர்வ மங்கலங்களையும் தர வல்லவை...
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனி காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயெளவனா ஸுபகரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த சந்தாயினி
வாணி பல்லவ பாணி வேணு முரளி கானப்ரியா லோலினி
கல்யாணி உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா நூபுர ரத்ன கங்கணதரி கேயூர ஹாராவலீ
ஜாதீசம்பக வைஜயந்தி லஹரி க்ரைவேய கைராஜிதா
வீணா வேணு விநோத மண்டிதகரா வீராஸன ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ரெளத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகி வைஷ்ணவி
ப்ரஹ்மாணி த்ரிபுராந்தகி ஸுரநுதா தேதீப்ய மானோஜ்வாலா
சாமுண்டா ச்ருதரக்ஷ போக்ஷ ஜனனி தாக்ஷாயணி வல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சூலதனு குசாங்குச தரிஅர்த்தேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரி ஆர்யா விஸம்ஸோபிதா
காயத்ரி ப்ரணவாக்ஷராம் ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா
ஓங்காரி விநதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா சாஸ்வதா ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தா ஜனனி யா வை ஜகன் மோஹினி
யா பஞ்ச ப்ரணவாதி ரேபஜனனி யா சித்கலா மாலினி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய: படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ச ஐஸ்வர்ய மவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடனாத் தந்தே மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!..
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகையே!..
சந்திர கலையைச் சூடியவளே!..
ஈரேழு புவனங்களுக்கும் ஆதாரமானவளே!..
தூம்ர லோசனனை வதைத்தவளே!..
புல்லாங்குழல் ஏந்திய கோவிந்த வடிவானவளே!..
முண்ட மாலைகளுடன் சண்பக மாலைகளையும்
ரத்னாபரணங்களையும் அணிந்திருப்பவளே!..
பத்ரகாளி எனவும் வைஷ்ணவி எனவும் வாராஹி எனவும்
வையகத்தில் தோன்றி தீமைகளை அழித்தவளே!..
சூலம், வில், கசை, அங்குசம் எனும்
ஆயுதங்களைக் கொண்டவளே!..
ஐம்பெருந் தொழில்களைப் புரிபவளே!..
ஓங்கார ஸ்வரூபிணியே!..
சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் வரையிலும்
பிரம்மனுடன் முப்பத்து முக்கோடித் தேவர்களையும்
ஈன்றளித்துக் காத்தவளே!..
நல்லறிவின் கலைகளாக ஒளிர்பவளே!..
சகல செல்வங்களையும் அருள்பவளே!..
வீரத்தின் விளைநிலமாகத் திகழ்பவளே!..
விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவியானவளே!...
சூழ்ந்திருக்கும் கொடுங்கிருமியைத்
தொலைத்து மக்களையும் பிற உயிர்களையும்
காத்தருள வேண்டும் தாயே!...
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
உலகை காத்திடட்டும் அன்னை ஸ்ரீராஜராஜேஸ்வரி வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி...
நீக்குதங்களுக்கு நல்வரவு...
உள் நின்று உழற்றும்
பகை முதலில் ஒழிய வேண்டும்...
வாழ்க பாரம்.. வளர்க தமிழகம்...
மகிழ்ச்சி.. நன்றி..
அம்மாவின் குரலில் இது காதில் கேட்கிறது. இதுவும் காமாட்சி அம்மன் பதிகமும் அம்மா தினம் சமைக்கையில் சொல்லிக் கொண்டே சமைப்பார். இப்போதும் "அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே!" என்னும் வரிகள் காதில் கேட்கும் உணர்வு. பழைய நினைவுகளை எழுப்பி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...
நீக்குஇணையத்தின் பிரச்னை... தாமதம்...
(இல்லாவிட்டாலும் ரொம்பவே சுறுசுறுப்பு)
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே...
கேட்கும் போதே கண்களில் நீர் வரும்...
கீதா அக்காவுக்கு அம்மாவின் குரலில் ஒலிக்கிறது. எனக்கு வேதம்புதிது பாடலுக்கு இடையே வரும் குரலில் ஒலிக்கிறது!!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குவேதம் புதிது படப் பாடலில் இந்த ஸ்லோகத்தை முதலில் கேட்டேன்...
தேடலில் ஒன்றும் விளங்கவில்லை..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி - என்று மகாநதி ஷோபனா வந்த பிறகு அவர் வழங்கிய ஒலிப் பேழை ஒன்றி இந்த அஷ்டகத்தைக் கண்டு கொண்டேன்...
அதன் பின் தேவஸியின் இசைக் கோர்வையும் வந்தது...
ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தில் ஆழந்திருந்த நேரம் அதிகம்...
மகிழ்ச்சி.. நன்றி..
தமிழில் வந்திருப்பது உங்கள் கைவண்ணம்தானே? அருமை.
பதிலளிநீக்குஆமாம்... அது அஷ்டகத்தின் வரிகளில் பெற்றது தான்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி...
படங்களும் வரிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குஎனக்கும் ஸ்ரீராம் போல வேதம்புதிது பாடல் தான் நினைவுக்கு வந்தது.
வாழ்க வையகம். நலமே விளையட்டும்.
அன்பின் வெங்கட்...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...
விடிவு காலம் விரைவில் வர வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்...
நீக்குநானும் அவ்விதமே வேண்டிக் கொள்கிறேன்...
மகிழ்ச்சி.. நன்றி...
எல்லா வேண்டுதல்களும் பலிக்கட்டும் கோரோனாவால் இந்தியா வரும் வாய்ப்பு உண்டா சார்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குஎல்லா வேண்டுதல்களும் பலிக்கட்டும்...
தாங்கள் கேட்டபடிக்கு முன்பே டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன்...
எல்லாம் ரத்து ஆகி விட்டது....
பரபரப்பு அடங்கட்டும்.. கடவுள் துணை...
ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம் படித்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் எழுதிய அம்மன் பாட்டும் அருமை.
அம்மனை வேண்டிக் கொள்வோம். அம்பிகையை சரண் அடைந்தால் அனைத்தும் நலமாகும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குஇக்கொடிய நோய்க்காலம் விரைவில் முடியட்டும். சேர்ந்து வேண்டுகிறோம், ஐயா
பதிலளிநீக்குநான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்
அன்பின் ஐயா..
நீக்குவெகு நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை..
மகிழ்ச்சி...
நான் கிருஷ்ண தேவராயன் -
வெளியான போதே படித்திருக்கிறேன்...
மீண்டும் இணையத்தில் படிக்கிறேன்..
நன்றி.. வாழ்க நலம்...