நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...
***
சில பதிவுகளுக்கு முந்தைய பதிவில்
மதிப்புக்குரிய சகோதரி ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
கண்டு தரிசித்துக் கைதொழுவதற்கு இயலாத வண்ணம்
ஆலயங்கள் எல்லாம் கதவடைத்துக் கிடக்கின்றனவே
என்று வருந்தியிருந்தார்கள்...
அடைபட்டுக் கிடக்கும் திருக்கதவங்கள் விரைவில்
திறப்பதற்கு ஈசன் திருவுளங் கொள்வானாக!..
அடைபட்டுக் கிடக்கும் திருக்கதவங்கள் விரைவில்
திறப்பதற்கு ஈசன் திருவுளங் கொள்வானாக!..
இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம்..
திருக்கதவம் தனைத்
திறப்பித்த திருப்பதிகம்..
திருத்தலம் - திருமறைக்காடு
வேதாரண்யம்
இறைவன் - மறைக்காட்டு மணாளன்.
அம்பிகை - பண்ணின் நேர் மொழியாள்
தீர்த்தம் - மணிகர்ணிகை திருக்குளம்
வேத தீர்த்தம் (கடல்)
வேத தீர்த்தம் (கடல்)
தல விருட்சம் - வன்னி மரம்
அகத்திய மகரிஷிக்கு
ஈசன் கல்யாணத் திருக்கோலம்
காட்டியருளிய திருத்தலம்..
திருமறைக்காடரின்
மூலஸ்தான நெய் விளக்கைத்
தூண்டிய எலி தான்
மாவலி மன்னனாகப் பிறந்தது.
சப்த விடங்கத் திருத்தலம்
புவனி விடங்கர் - ஹம்ச நடனம்..
அப்பர் ஸ்வாமிகளும்
ஞானசம்பந்தப்பெருமானும்
தங்கியிருந்த திருத்தலம்..
கோளறு திருப்பதிகம் பிறந்தது
இங்கே தான்...
பித்ரு காரியங்கள் நிறைவேற்ற
சிறந்த தலம்..
தஞ்சை, திருஆரூர், மயிலாடுதுறை, நாகை
ஈசன் கல்யாணத் திருக்கோலம்
காட்டியருளிய திருத்தலம்..
திருமறைக்காடரின்
மூலஸ்தான நெய் விளக்கைத்
தூண்டிய எலி தான்
மாவலி மன்னனாகப் பிறந்தது.
சப்த விடங்கத் திருத்தலம்
புவனி விடங்கர் - ஹம்ச நடனம்..
அப்பர் ஸ்வாமிகளும்
ஞானசம்பந்தப்பெருமானும்
தங்கியிருந்த திருத்தலம்..
கோளறு திருப்பதிகம் பிறந்தது
இங்கே தான்...
பித்ரு காரியங்கள் நிறைவேற்ற
சிறந்த தலம்..
தஞ்சை, திருஆரூர், மயிலாடுதுறை, நாகை
முதலான நகரங்களில் இருந்து
எப்போதும் பேருந்து வசதிகள்..
எப்போதும் பேருந்து வசதிகள்..
பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய்ம் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.. 1
ஈண்டு செஞ்சடையாள் ஆகத்து ஈசரோ
மூண்ட கார்முகிலின் முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.. 2
அட்ட மூர்த்தி யதாகிய அப்பரோ
துட்டர் வான்புரம் சுட்ட சுவண்டரோ
பட்டங்கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.. 3
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.. 4
மலையில் நீடிருக்கும் மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ்சும் கழல் ஏத்தரோ
விலையில் மாமணி வண்ண உருவரோ
தொலைவிலாக் கதவந் துணை நீக்குமே.. 5
பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரியீர் அடிகேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.. 6
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீஅடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே.. 7
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெருமான் இந்த்
மாறிலாக் கதவம் வலி நீக்குமே.. 8
சுண்ண வெண்பொடி பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறுகந்தேறும் பரமரோ
அண்ணல் ஆதி அணிமறைக் காடரோ
திண்ணமாக் கதவம் திறப் பிம்மினே.. 9
விண்ணுளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்ணுளார் வணங்கும் மறைக் காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந் தருள் செய்ம்மினே.. 10
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெரு மானீரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
அருமையான பதிவு. அனைத்துக் கோயில்களின் திருக்கதவுகளும் இறை அருளால் தாழ் திறக்கட்டும். மனிதர்களும் கட்டுப்பாட்டுடன் வந்து இறைவனைத் தொழ வேண்டும். அதற்குப் பயந்து தான் திறக்கவில்லை என்கிறார்கள். இறை அருள் அனைவரையும் காத்து அருளட்டும் என வேண்டுவது ஒன்றே வழி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இறையருள் கிடைத்திடட்டும்.
பதிலளிநீக்குநலமே விளையட்டும்.
இறைவன் நினைத்தால் அனைத்தும் நலமே...
பதிலளிநீக்குதிருக்கதவங்கள் மூடி இருந்தாலும் இறைவன் அருள் என்றும் இருக்கும். திறப்பது இன்றைய சூழலில் நல்ல விஷயமா என்று தெரியவில்லை. மக்கள் தங்களை மீறி கட்டுப்பாடிழப்பார்கள். பயமாய்தான் இருக்கிறது. ஆண்டவன் அகிலத்தைக் காக்கட்டும்.
பதிலளிநீக்குகோயில் திறந்து நித்தியப்படி பூஜைகள் நடக்கிறது. விழாக்களும் நடக்கிறது . சில கோவில்களில். அம்மாவீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் என் தங்கை கட்டளை பெளர்ணமி பூஜைக்கு அதனால் அவளை அழைத்து பெளர்ணமி பூஜை செய்கிறார்கள். மீனாட்சி கல்யாணம் அழகர் திருவிழா எல்லாம் நடக்கிறது.
பதிலளிநீக்குஇப்படி சிலரை வைத்து செய்யும் பூஜைகள் பலரும் காணும் நாள் வரும் . இறைவன் அருளால். நம்புவோம்.
பதிகம் படித்து வேண்டிக் கொண்டேன்.
கோமதி, கோயில்கள் மூடி இருக்கின்றன என்பது பொதுமக்களுக்கு மட்டுமே. மற்றபடி தினசரி கால வழிபாடுகள், நிவேதனங்கள், திருவிழாக்களைக் கோயிலிலேயே நடத்துவது என குருக்களும், பட்டரும் பட்டாசாரியார்களும் இறைவனுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அன்றாடம் தினசரி எப்படி நடக்குமோ அப்படி நடந்து வருகிறது. கோயில்களைப் பூட்டுவது என்பதே இல்லை. மக்களுக்கு தரிசனம் இல்லை. மற்றபடி திருமலையில் பத்மாவதி திருமணம் கூட பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது. ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் சேரகுலவல்லியுடன் சேர்த்தி சேவை எளிமையாக நடந்தது. சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள் நடராஜருக்குச் செய்ய வேண்டியவற்றைக் குறைவின்றிச் செய்வதோடு பக்கத்திலேயே உள்ள கோவிந்தராஜப் பெருமாளின் தாயாருக்கு பிரம்மோத்சவம் நடந்தபோது தீக்ஷிதர்களே தாயாரைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வலம் வந்தார்கள். மீனாக்ஷி திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியும். அதே போல் அழகரும் கோயிலுக்குள்ளே மண்டூக முனிவருக்கு முக்தி கொடுத்தார். எல்லாம் பார்த்தோம்.
நீக்குதிருமறைக்காடு..பார்க்கவேண்டிய கோயில்..பல முறை சென்றுள்ளேன். இன்று நீங்கள் அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நன்றி.
பதிலளிநீக்கு