நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 25, 2020

காளி வந்தாள் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

வருடந்தோறும் அக்னி நட்சத்திரத்தை அனுசரித்து
வைகாசியின் மத்தியில்
வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களுக்கு
எங்கள் அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்குத்
திருவிழா நடைபெறுவது வழக்கம்...

வெள்ளிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனி..
ஞாயிறன்று காலையில் பால்குடம்.. மாலையில் சந்தனக்காப்பு..

இடையில் சனிக்கிழமையன்று
எங்களது மண்டகப்படி.. சிறப்புத் தளிகை...

கீழுள்ள படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை....






அம்பிகையின் முகத்தில் குறுநகை
பால்குடங்கள் புறப்படும் காட்சிகள்..









இந்தப் படங்கள் எல்லாம் ஆறாண்டுகளுக்கு முந்தையவை...

சரி... இப்போது என்ன விசேஷம்!?..

சூழ்நிலையின் காரணமாக தமிழகத்தில் கோயில் விசேஷங்கள்
தடைபட்டிருக்கும் வேளையில் நேற்று (23/5) சனிக்கிழமை
அன்று மாலை எங்கள் மண்டகப்படி நிகழ்ந்துள்ளது..

நிகழ்வுகளைப் படமெடுத்த என் மகன் அவற்றை
எனக்கும் கனடாவில் உள்ள அவனது அக்காவுக்கும்
அனுப்பி வைத்திருக்கிறான்...

அதற்குப் பிறகு நடந்தது தான் விசேஷம்..
அதை நாளைக்குக் காண்போம்... 

சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங் கமாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. அன்னை காளிதான் அருள வேண்டும். முதலில் நம்மை அச்சுறுத்தும் இந்தப் பயம் விலக வேண்டும்.
    புன்னகைக்கும் அம்மா மிக அழகு.
    பால்குடங்களும்,மஞ்சள் வேஷ்டி அணிந்து நடக்கும் பக்தர்களைக் கண்டாலே
    அருள் நிரம்புகிறது.
    அன்பு துரை தங்கள் மகள் ,அபுதாபியில் இருப்பதாக நினைத்தேன்.
    எங்கிருந்தாலும் மனைவி மக்கள் நலமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      என் மகள் அபுதாபியில் தான் இருக்கிறாள்.. கனடாவில் இருப்பவள் என் மனைவியின் அக்கா மகள்...

      பதிவில் விளங்கும்படியாக சொல்லாதது என் தவறு...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  2. அன்னை காளி மனம் குளிர்ந்து நம் அனைவரையும் இந்தக் கொடிய தொற்றிலிருந்து விடுவிப்பாள். மனமாரப்பிரார்த்திப்போம். தங்கள் மகள் பக்கத்திலேயே இருந்ததாகக் கேள்விப் பட்டேன். கனடா சென்று விட்டார்களா? எங்கிருந்தாலும் நலமே இருக்கட்டும். உங்களுக்குத் தான் பேத்தியைப் பார்க்கமுடியாது! ஸ்கைப், வாட்சப் மூலம் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா..

      நான் பதிவில் விளங்கும்படியாகச் சொல்லாதது எனது பிழை...

      எனது மகள் அருகில் அபுதாபியில் தான் இருக்கிறாள்...

      கண்டாவில் இருப்பவர் என் மனைவியின் அக்கா மகள்...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. மண்டகப்படி முடிந்ததும் நடந்த அந்தச் சிறப்பு நிகழ்வுக்காக நாளை வரை காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. காளி அம்மன் கருணை காட்டவேண்டும்.  ஆறு வருடங்களுக்கு முன்னால் நடந்த விழாவின் புகைப்படங்கள் என்று படித்ததும், மறுபடி திருவிழா நடக்கும் நாள் எந்நாளோ என்று படித்துக் கொண்டே வந்தால் இன்ப அதிர்ச்சி.  நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. காளி உலகை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. சக்தி அனைவரையும் காக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  7. காளி எல்லோருக்கும் நலம் அருள வேண்டும்.

    நாளை என்ன சொல்லபோகிறீர்கள் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. அம்மன் முகத்தில் குறுநகை மகிழ்ச்சியான தகவல் சொல்லபோகிறீர்கள் என்கிறது.

    பதிலளிநீக்கு
  9. அன்னை காளி பூரண அருள் புரியட்டும்.

    படங்கள் நன்று.

    அடுத்த நிகழ்வு பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வெம்மைக்கும் உக்கிரத்திற்கும் அதிபதியானவள் காளி யல்லவா? அவள் அருள் இருந்தால் தானே அவற்றை வெல்ல முடியும்? படங்கள் அருமை. அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அம்மன் படங்கள் இதம். நல்லது நடக்கட்டும். உங்களின் மண்டகப்படிக்குப் பின்னர் நடந்த்த அந்த விசேஷம் என்ன என்று அறிய ஆவல்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..