நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 15, 2020

திருப்புகழ் 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..

திருத்தலம் - திருச்செந்தூர்

சூரர் கொடுங்குலம்
வேரறுக்கப்பட்ட திருத்தலம்..


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே..
-: கந்தர் அலங்காரம் :-


முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி - உழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு - முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு - நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அனுகூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது - வருவாயே..


அந்தண்மறை வேள்விக் காவற் கார
செந்தமிழ்சொற் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற்கார - முடிமேல

அஞ்சலிசெய் வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார - எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார - எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்திநகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே.. 
***

முருகா சரணம்..முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. திருப்பகழைப் பாடப்பாட வாய் மணக்கும்...

    எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்.்்்்

    வேல் வேல் முருகா... வெற்றிவேல் முருகா...

    பதிலளிநீக்கு
  2. முருகா சரணம் முதல்வா சரணம்....

    பதிலளிநீக்கு
  3. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

    தொடரட்டும் பக்தி ரசம்.

    பதிலளிநீக்கு
  4. "கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் தலையெழுத்தே" ...என்பது உண்மையிலும் உண்மை. நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. முருகன் படம் கடைசியில் இருப்பது அழகு.
    முருகா சரணம் கந்தா சரணம்
    காக்க வா குமரா.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. இன்னிக்குக் கந்த சஷ்டி கவசம் சொல்லும்போது திருச்செந்தூர் முருகனையும் பாலன் தேவராயனையும் நினைத்துக் கொண்டே இருந்தேன். இங்கே வந்தால் திருச்செந்தூர்த் திருப்புகழ்! ஐயன் தரிசனமும் அருமை. கடைசிப் படம் யாரோ வேலன் என்பவரால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. வேலனை வேலன் எழுதியதும் பொருத்தம் தானே!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..