நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 07, 2020

அழகரே வருக..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று சித்ரா பௌர்ணமி..

வைகையாற்றில்
ஸ்ரீ கள்ளழகர் இறங்கும் நாள்..

இன்றைய பதிவில்
கள்ளழகர் தரிசனம்..


நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிரு வுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ..(0592)
-: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-





அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின்ற திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது.. (2138)
-: பொய்கையாழ்வார் :-




உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள்மாலே மணந்தாய் போய்
வேயிருஞ்சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மாயிருஞ் சோலை மலை.. (2229) 
-: பூதத்தாழ்வார் :- 




சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப விண்ணா
றலம்பிய சேவடிபோய் அண்டம் புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாதென்கொலோ
வண்டுழாய் மாலளந்த மண்.. (2371) 
-: பேயாழ்வார் :-


அழகரே வருக..
ஆழியொடு வெண்சங்கு
அணி சூடி வருக..
கடுத்ததொரு கூர் வாளுங்
கௌ மோதகி தாங்கி 
கோதண்டம் ஏந்தி வருக..

கொடி கொண்டு கூத்தாடும்
கொடுமை கள்தீர்க்க வருக...
வருகின்ற வழி பார்த்து
வணங்கியே நிற்கின்ற 
அடியவர் முகம் நோக்கி
அஞ்சலென் றருள வருக..



தோள் கொண்ட கோதண்டம்
துன்பங்கள் தீர்க்கவும்
வாள் கொண்ட கூர்முனை
வன்பகை மாய்க்கவும்
ஆழியொடு சரம் தாங்கி
அழகரே வருக.. வருக..

பொன்னழகும் பூவழகும்
சொல்லழகும் தமிழழகும்
தாங்கியே இங்கு வருக...
அன்பினில் அணி செயும்
அடியவர் தமைக் காக்க
அழகரே வருக.. வருக...

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. மதுரையை மிஸ் செய்கிறேன். அழகர் ஆண்ணவர் அகிலத்தைக் காக்கப் பிரார்த்திக்கிறேன். இத்தாலி ஏதோ வேக்ஸின் கண்டுபிடித்து விட்டதாமே...

    பதிலளிநீக்கு
  2. அழகர் அருளால் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. மீனாக்ஷி கல்யாணத்தை நடத்திய மாதிரி ரகசியமாகவேனும் அழகரைக் கொண்டு வர முயற்சித்துப் பின்னர் அது முடியாது, வழியெங்கும் மக்கள் கூடிவிடுவார்கள் என நிறுத்திவிட்டார்கள் என்று தினசரிகளில் செய்திகள் வந்தன. இதெல்லாம் இல்லாமல் போனது இந்த வருஷம் ஓர் பெரிய மனத்தாங்கலே. இன்று இங்கே அரங்கனும் அம்மாமண்டபம் மண்டகப்படிக்கு கஜேந்திர மோக்ஷத்துக்காக வர வேண்டும். ஆனால் அரங்கன் வரப் போவதில்லையாம்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றுதான் சித்ரா பௌர்ணமி அன்று அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெறுமே என்று நினைத்துக் கொண்டேன். 

      நீக்கு
    2. எல்லா மங்கல நிகழ்ச்சிகளையும் மணக்கண்ணில் தரிசித்து மகிழ்வு கொள்ளுங்கள் என்பது இறைவனின் நாட்டமாகக் கூட இருக்கலாம்...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  4. கொரோனா காலத்தில் கள்ளழகருக்கும் கஷ்டமே! விரைவில் இயல்புனிலை திரும்பவேண்டும்.

    தங்கள் படங்களும் அட்வற்றுடன் இயைந்த பாசுரங்களும் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்களின் விருப்பப்படியே விரைவில் இயல்பு நிலை திரும்பட்டும்...
      நல்லவர் எல்லாருடைய விருப்பமும் அதுவே...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அழகரை கண்டேன். பாசுரங்கள் படித்து அழகரை தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்...

      நீக்கு
  6. படங்கள் அருமை, சில பழைய திருவிழாவை நினைவுபடுத்தியது.

    மக்களுக்கு மட்டும் 'புரிதல்' இருந்தால், திருவிழாக்கள், தொடர்ச்சிக்காக, எளிமையாகவேனும் நடந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தாங்கள் சொல்வது போல இல்லை...
      புரிதல் இருந்தால் தான் மக்கள் மக்களாகி விடலாமே...

      இதுவும் அவனது நாட்டமே என்று இருப்போம்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. இந்த வருடம் எல்லா கோவில் விசேஷங்களும் ஏனோ தானோவென்று நடந்திருக்கின்றன. மீண்டும் எல்லாம் சிறப்பாக நடக்க இறைவனை வேண்டுவோம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அவனது விருப்பம்...
      இந்நிலையும் விரைவில் மாறும்...

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் நன்று.

    மதுரை சித்திரைத் திருநாள் வைபவங்களையும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..