நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
கடந்த சனிக்கிழமை இரவு 8:45
கைப்பேசியில் அமைப்பு..
எடுத்து நோக்கினால் கனடாவில் இருந்து..
என் மனைவியின் அக்கா மகள்..
தான் சார்ந்துள்ள I.T.. நிறுவனத்திற்காக
தற்போது கனடாவில் இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றார்..
இதனை விவரமாகச் சொல்லாததனால்
அபுதாபியில் இருக்கும் என் மகள் என்று
அர்த்தம் ஆகி விட்டது..
என்னம்மா!.. எப்படியிருக்கிறாய்?..
- என்றேன் சாதாரணமாக...
மண்டகப்படி நல்லா நடந்தது,..
எனக்கு ரொம்பவும் சந்தோஷம்...
எல்லாரும் எங்கிட்ட பேசணும்..ன்னு காத்திருக்காங்க..
நான் உங்களத் தேடி வந்திருக்கிறேன்!...
அந்த வார்த்தைகளின் தன்மையைப் புரிந்து கொண்டு
விக்கித்துப் போனேன்.. பேசுவது என் மகள் தான்..
ஆனாலும் அவளல்ல!.. கண்களில் நீர் சுரந்து விட்டது...
என்னையே நினைச்சுக்கிட்டு இருக்குற
உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேணமா?...
யாரும் கூட இல்லையேன்னு நெனைச்சிட்டீங்களா?..
நான் கை விடுவேனா!...
- என்றபடிக்கு அறையில் எலுமிச்சம்பழம் இருக்கிறதா
என்று வினவியதுடன் சில வழிமுறைகளைச் சொன்னாள்..
அன்பின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே
அல்லல்படுத்திக் கொண்டிருந்த காய்ச்சல்
தொலைந்தது தான் ஆச்சர்யம்...
ஆனாலும் சில நாட்களாக தலைவலி..
இது கூட அன்னையின் சித்தமாக இருக்கலாம்...
இன்றைய பதிவில்
ஸ்ரீ வீரமாகாளியின் திருக்கோயில் படங்களும்
அன்றைய அலங்கார தரிசன காட்சியும்...
யாதுமாகி நிற்கும் காளி
கனடாவில் இருந்து எனது கஷ்டத்தைத் தீர்க்கிறாள் எனில்
இதில் எனது விஷயம் என்று ஏதும் கிடையாது..
எல்லாம் எனது முன்னோர் செய்த தவப்பயன் தான்..
இத்தன்மையே இனிவரும் தலைமுறைக்கும் ஆகவேண்டும்..
எல்லாரது குறைகளும் கஷ்டங்களும் தீரவேண்டும்!..
என்ற பிரார்த்தனைகளுடன் இந்த அளவில்
இந்த ப் பதிவிவினை நிறைவு செய்கின்றேன்..
அன்னை நிகழ்த்திய அற்புதங்களுள் வேறொன்று
அடுத்து வரும் நல்லதொரு வேளையில்!..
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித் தன்சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே..
-: திருமூலர் :-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ
நான் கை விடுவேனா!...
- என்றபடிக்கு அறையில் எலுமிச்சம்பழம் இருக்கிறதா
என்று வினவியதுடன் சில வழிமுறைகளைச் சொன்னாள்..
அன்பின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே
அல்லல்படுத்திக் கொண்டிருந்த காய்ச்சல்
தொலைந்தது தான் ஆச்சர்யம்...
ஆனாலும் சில நாட்களாக தலைவலி..
இது கூட அன்னையின் சித்தமாக இருக்கலாம்...
இன்றைய பதிவில்
ஸ்ரீ வீரமாகாளியின் திருக்கோயில் படங்களும்
அன்றைய அலங்கார தரிசன காட்சியும்...
கனடாவில் இருந்து எனது கஷ்டத்தைத் தீர்க்கிறாள் எனில்
இதில் எனது விஷயம் என்று ஏதும் கிடையாது..
எல்லாம் எனது முன்னோர் செய்த தவப்பயன் தான்..
இத்தன்மையே இனிவரும் தலைமுறைக்கும் ஆகவேண்டும்..
எல்லாரது குறைகளும் கஷ்டங்களும் தீரவேண்டும்!..
என்ற பிரார்த்தனைகளுடன் இந்த அளவில்
இந்த ப் பதிவிவினை நிறைவு செய்கின்றேன்..
அன்னை நிகழ்த்திய அற்புதங்களுள் வேறொன்று
அடுத்து வரும் நல்லதொரு வேளையில்!..
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித் தன்சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே..
-: திருமூலர் :-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ
மீதமிருக்கும் அந்தத் தலைவலியும் சீக்கிரம் விலக அன்னை வீரமாகாளி அருள் புரியட்டும். நல்லாருக்கு என்றும், எங்கும் உண்டு துணை.
பதிலளிநீக்குவிரைவில் பூரண நலம் பெறுவீர்கள் ஐயா...
பதிலளிநீக்குஅன்பு மகள் சொன்ன எலுமிச்சை வைத்தியம் கை கொடுத்து இருக்கும். தெய்வீககனி அல்லவா?
பதிலளிநீக்குகாளி அருளால் நலம் அடைந்து இருப்பீர்கள். தலைவலி சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
காளி பாடல் பாடி வேண்டிக் கொண்டேன் எல்லோர் நலத்திற்கும்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
காளியின் அருளால் நலம் பெறுக
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
கஷ்டமான மனம் பாரமான சமயங்களில் அன்புக்குரியவரின் ஆறுதல் மொழிகள் கொடுக்கும் நிம்மதியைப் போல் வேறே ஏதும் இல்லை. உங்கள் உடல் நலம், மன நலம் அனைத்தும் அமைதி அடையப் பிரார்த்தனைகள். வீரமாகாளியின் தரிசனமும் கிடைத்தது. விரைவில் பரிபூரணமாக நலம் அடையவும் பிரார்த்தனைகள். தலைவலியும் குணம் அடையப் பிரார்த்தனைகள். காளி அருள் புரிவாள்.
பதிலளிநீக்குஇதுபோன்ற அழைப்புகள் தரும் மன நிம்மதிக்கு இணை எதுவுமில்லை.
பதிலளிநீக்குகாளி தரிசனம் வெகு அருமை. மிக்க நன்றி பகிர்வுக்கு. உடல் நலத்தில் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
பதிலளிநீக்குஉங்கள் உடல நலம் தேறி வரும் சமயம் தலைவலி அதுவும் விரைவில் சரியாகிவிடும். அன்பு அழைப்புகள் எப்போதுமே தெம்பு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காளியின் அருள் கிட்டி நலம் பெறுவீர்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா
துரை அண்ணா மகள் கனடா என்று சொல்லியிருந்த போதே தோன்றியது உங்கள் மகள் அபிதாபியில் அல்லவா இருக்கிறார் என்று. நான் நினைத்தேன் அவர்தான் தற்போது கானடாவில் இருக்கிறாரோ என்று. இப்போது புரிந்தது.
உடல் நலம் பார்த்துக்கோங்க அண்ணா. நலமடைந்திடுவீங்க.
கீதா
நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண நலம் பெற அன்னையை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு